ரமலான் சிந்தனைகள்-24| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரமலான் சிந்தனைகள்-24

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரமலான் சிந்தனைகள்-24

நட்பு விஷயத்தில் கவனம்

ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதாக வைத்துக் கொள்ளுங்கள். 'பையன் நல்லவன் தானா? தொழுகையை சரியாக கடைபிடிப்பவனா? படித்தவன் என்றாலும் படித்தவன் போல் நடந்து கொள்கிறானா? படிக்காவிட்டாலும் நல்ல குணம் உடையவனா? கெட்ட பழக்கங்கள் கொண்டவனா?' என்றெல்லாம் விசாரிப்பது வழக்கம்.இந்த விஷயத்தில் பையனைப் பற்றி
விசாரிக்கும் முன் அவனது நண்பனைப் பற்றியும் விசாரியுங்கள் என்கிறார் நபிகள் நாயகம்.
ஏனெனில், நண்பன் குடிகாரனாக இருந்தால், உடன் சேர்ந்தவனையும் கெடுத்து விடுவான்.
“ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர்.அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவனும் தனதுநண்பனைத் தான் பின்பற்றுவான்,” என்பது நாயகத்தின் அறிவுரை.

இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:16 மணி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை