'பஸ் டே' : 100 இடங்களில் கண்காணிப்பு | 'பஸ் டே' அட்டூழியத்தை தடுக்க 100 இடங்களில் கண்காணிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பஸ் டே' அட்டூழியத்தை தடுக்க 100 இடங்களில் கண்காணிப்பு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'பஸ் டே' : 100 இடங்களில் கண்காணிப்பு

சென்னை : 'பஸ் டே' கொண்டாட்டத்தை தடுக்கவும், மாணவர்களுக்குள் கோஷ்டி தகராறு ஏற்படாமல் தடுக்கவும், 100 இடங்களில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையில், 'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது. இதனால், நகரின் சட்டம் -- ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

சில தினங்களுக்கு முன், பச்சையப்பன் கல்லுாரி மற்றும் மாநில கல்லுாரி மாணவர்கள், 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகளும், பயணியரும் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.

பஸ் டே' அட்டூழியம்: கண்காணிப்பு தீவிரம்

இதையடுத்து, கல்லுாரி மாணவர்கள் செல்லும் பேருந்து வழித்தடங்களில், 'பஸ் டே' கொண்டாட்டத்தை தடுக்கவும், அவர்களுக்குள் தகராறு ஏற்படாமல் தடுக்கவும், 100 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201714:46:11 IST Report Abuse
மலரின் மகள் சாலைகளில் ஓடும் பேருந்துகளில் தேவை அற்றது அவரவர் கல்லூரிக்கு அழைத்து ஓட்டுநர் நடத்துனரும் சிறப்பு செய்யலாம். பணிமனைக்கு சென்று அந்த பேருந்துக்கு வேண்டிய கருவிகளை பழுது நீக்க பொருளுதவிக்கு உதவலாம். மாணவர்கள் பயணம் செய்யட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201710:12:10 IST Report Abuse
Giridharan S மாணவர்கள் கையில்தான் இந்த கொண்டாட்டம் உள்ளது மெரினா வழியில் கொண்டாடினால் அனைவராலும் வரவேற்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
20-ஜூன்-201709:25:45 IST Report Abuse
balakrishnan எவன் இதில் ஈடுபட்டாலும் உடனடியாக அவனை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் , இந்த கொண்டாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும், அடுத்து வரும் மாணவர்களுக்கு இப்படி கொண்டாடவேண்டும் என்ற எண்ணமே வரக்கூடாது, ஒழுங்கா படிச்சு பாஸாகி நல்ல உத்தியோகம் போறத்துக்கு யோக்கியதை இல்லை, இந்த லட்சணத்தில் பஸ் டே, இது ஒன்னு தன கொரச்சல்
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
20-ஜூன்-201721:12:34 IST Report Abuse
sundaramஅரசை கவிழ்க்க நல்ல யோசனை. மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கினால் நாடு முழுவதும் குருமா வைகோ தலைமையில் கிடு கிடு poraattam வெடிக்கும். தளபதி ஆதரவு கொடுப்பார். துப்பாக்கி வெடிக்கும். ஒரு மாணவர் சாவார். பிணத்தை வைத்து சட்டம் ஒழுங்கு என்று இம்சை அரசி ஒப்பாரி வைப்பார். அப்புறம் என்ன, 356 ....சூப்பர் ஐடியா பாலகிருஷ்ணன் அவர்களே....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:12:16 IST Report Abuse
Srinivasan Kannaiya 'பஸ் டே' என்ற போர்வையில் கல்லூரி காளைகளும் அவர்கள் போர்வையில் சமூக விரோதிகளும் அடிக்கும் கொட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. பெற்றோர்கள்தான் பிள்ளைகளை தடை செய்யவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
SriRa -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201708:04:07 IST Report Abuse
SriRa These are not students, but third eaters scoundrels in guise.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201703:20:34 IST Report Abuse
அப்பாவி வேலை வெட்டியில்லாதவர்கள் பெருகி வருவதைக் காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை