ரூ.709 கோடியை செலுத்த சுப்ரதா ராய்க்கு அவகாசம்| Dinamalar

ரூ.709 கோடியை செலுத்த சுப்ரதா ராய்க்கு அவகாசம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ரூ.709 கோடியை செலுத்த சுப்ரதா ராய்க்கு அவகாசம்

புதுடில்லி, சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயின் ஜாமினை நீட்டித்துள்ள சுப்ரீம் கோர்ட், 709 கோடி ரூபாயை செலுத்த, மேலும், 10 நாட்கள் அவகாசம் அளித்து
உள்ளது.முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக, சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'பொது மக்களிடம் இருந்து முதலீடாகப் பெற்ற, 24 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும்' என, சுப்ரதா ராய்க்கு, சுப்ரீம் கோர்ட், 2012, ஆகஸ்ட், 31ல் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்ரதா ராய், 2016 மே மாதம், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதற்காக, முதலீடாக பெற்று மோசடி செய்த தொகையை செலுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 1,500 கோடி ரூபாயை செலுத்த, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.அதில், 790.18 கோடி ரூபாய் ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில், 'மீதமுள்ள, 709.82 கோடி ரூபாயை செலுத்த மேலும் அவகாசம் அளிக்க வேண்டும்' என, சுப்ரதா ராய் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று
முறையிடப்பட்டது.
அதை ஏற்ற, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய் அமர்வு, மீதமுள்ள பணத்தைச் செலுத்த, மேலும், 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது; சுப்ரதா ராயின் ஜாமினையும், ஜூலை, 5 வரை நீட்டித்தது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Only Real No politics - Chennai,இந்தியா
20-ஜூன்-201711:01:40 IST Report Abuse
Only Real No politics அடிச்சது 24 ஆயிரம் கோடி திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. முதல் தவணையாக 1500 கோடி செலுத்த உத்தரவு அதற்காக 14 மாதத்திற்கு ஜாமீன், என்னய்யா தீர்ப்பு இது, இப்படி வருட கணக்கில் ஜாமீன் கொடுத்தால் எவனுக்கும் கொள்ளையடிச்ச பணத்தை திருப்பி கொடுக்கணும்னு தோணாது, சொத்துக்களை ஜப்தி செய்து முதலீடு செய்தவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை உடனடியாக கொடுக்க வேண்டாமா, அது வரைக்கும் இவனை சிறையில் அடைக்க வேண்டும் எந்த ஒரு மீனையும் இவனுக்கு கொடுக்க கூடாது, இந்த மாதிரி தீர்ப்புகள் வந்தால் நாட்டில் ஊழல்கள் ஒழிய வாய்ப்பே இல்லை....
Rate this:
Share this comment
மணி மாறன் - chennai,இந்தியா
20-ஜூன்-201716:16:31 IST Report Abuse
மணி மாறன் ஜாமீன் கொடுத்தா தான் வெளியில போய் திரும்பவும் கொள்ளை அடிச்சி கொடுப்பாரு இல்ல.. அதான்..இதில எல்லோரும் கூட்டு களவாணிங்க தான் கட்சி பேதம் இல்லாம .......
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201711:00:43 IST Report Abuse
karthikeyan எவ்வளவு காசுடா வாங்குவீங்க.
Rate this:
Share this comment
Cancel
JOKER - chennai,இந்தியா
20-ஜூன்-201709:44:34 IST Report Abuse
JOKER பொழைக்க தெரியாதா ஆளு போல. பேங்க் ல லோன் கேட்டா 709 கோடி உடனே கொடுக்க போறாங்க. ஒரே ஒரு கண்டிஷன் தான். வெளிநாட்டுக்கு தப்பி ஓடி எங்க மானத்தை வாங்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
SundarRaj - Velore,இந்தியா
20-ஜூன்-201708:19:13 IST Report Abuse
SundarRaj ஜெட்லியை பார்கலையோ நீங்க. போய் பாருங்க லண்டன் அனுப்பி வைப்பார் . 24 ஆயிரம் கோடி மோசடியாம், 1500 கோடி கட்டவே 5 வருஷம் ....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:53:21 IST Report Abuse
Srinivasan Kannaiya இவரை மல்லையாவிடம் பயிற்சி எடுக்க சொல்லவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201706:23:34 IST Report Abuse
Giridharan S நல்ல வேலை இவரோட பாஸ் போர்டை முடக்கிட்டாங்க போல இருக்கு. இல்லேன்னா அப்புறம் இவரை தேடி நம்ம ஆளுங்க மற்ற நாட்டுக்காரங்களை கெஞ்சிட்டு இருப்பாங்க ஆமாம் மல்லையா மல்லையா ன்னு ஒருத்தர் இருந்தாரே அவர் கேஸ் என்னாச்சுங்க
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201701:54:10 IST Report Abuse
Mani . V இப்படி பல நூறு, ஆயிரம், லட்சம் கோடிகளில் கடன் வாங்கியவன்களுக்கு கால அவகாசம் கொடுப்பதும், ஏழை விவசாயிகள் வாங்கிய ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு வீட்டை, நிலத்தை ஜப்தி செய்யும் இந்த "நல்லாட்சியை" நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
20-ஜூன்-201710:10:16 IST Report Abuse
sundaramஇப்படி பல நூறு, ஆயிரம், லட்சம் கோடிகளில் கடன் வாங்கியவன்களுக்கு கால அவகாசம் கொடுப்பதும், ஏழை விவசாயிகள் வாங்கிய ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு வீட்டை, நிலத்தை ஜப்தி செய்யும் இந்த "நல்லாட்சியை" நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. பாரத் மாதா கீ கீ ஜே . இப்படி இருந்திருக்கவேண்டும் உங்கள் கருத்து...
Rate this:
Share this comment
Cancel
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
20-ஜூன்-201700:33:19 IST Report Abuse
arumugam subbiah பொது மக்களிடம் பெற்றது 24 ஆயிரம் கோடி திரும்ப செலுத்துவது 1500 கோடியில் 709 கோடி பாக்கி அதை செலுத்த 10 நாள் அவகாசம். மீதி பணம் யாரால் எப்போது செலுத்தப்படும். அது உரிய பொதுமக்களுக்கு சென்று ஒழுங்காக சேருமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.