'டாஸ்மாக்' மது விற்பனை ரூ.27 ஆயிரம் கோடி வருவாய் Dinamalar
பதிவு செய்த நாள் :
'டாஸ்மாக்' மது விற்பனை
ரூ.27 ஆயிரம் கோடி வருவாய்

'டாஸ்மாக்' மது விற்பனை மூலம், தமிழக அரசுக்கு, 26 ஆயிரத்து, 995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

டாஸ்மாக், மது விற்பனை, வருவாய், தமிழக அரசு, சட்டசபை தேர்தல், ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம்,  TASMAC, Liquor sale, revenue, Tamil Nadu, assembly elections, jayalalitha, Supreme Court

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 6,300 மதுக்கடைகள் இருந்தன. அவற்றில், தினமும் சராசரியாக, 80 கோடி ரூபாய் மதிப்பிலான,பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின.

வருவாய் பாதிக்கவில்லை.


அரசுக்கு, மதுவிற்பனையில் இருந்து, ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி

மூலம் வருவாய் கிடைக்கிறது. அதன்படி, 2015 - 16ல், டாஸ்மாக் மூலம், தமிழக அரசுக்கு, 25 ஆயிரத்து, 845 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இது, 2016 - 17ல், 26 ஆயிரத்து, 995 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து,டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 2016ல், 6,800 மதுக்கடைகள் இருந்தன. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, 500 மதுக்கடைகளை மூட, 2016 மே மாதம் உத்தரவிட்டார்.
அதன்படி, அந்த கடைகள் மூடப்பட்டதால், மொத்த கடைகளின் எண்ணிக்கை, 6,300 ஆக குறைந்தது. ஜெ., மறைந்த பின், பிப்ரவரியில் முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி, மேலும், 500 கடைகளை மூட உத்தரவிட்டார்.இருப்பினும், மதுவிற்பனை குறையாததால், கடந்த நிதியாண்டில்,அரசின் வருவாய் பாதிக்கவில்லை.

Advertisement



உச்ச நீதிமன்ற உத்தரவைதொடர்ந்து, ஏப்., முதல், மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால், தற்போது மது விற்பனை குறைந்துள்ளதால், வரும் ஆண்டுகளில், அரசின் வருவாய்பாதிக்கும். இவ்வாறு அவர்கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-201721:43:33 IST Report Abuse

kulandhaikannanPeople are not ready for fair pricing of bus fare, EB rates, stamp duty, property tax etc. They want loan waiver, free fan, tv, mixie, underwear etc. How can the govt. do all these things excrpt with the help of Tasmac

Rate this:
Arivu Nambi - madurai,இந்தியா
20-ஜூன்-201720:08:22 IST Report Abuse

Arivu Nambiஉலக அரங்கில் குடிப்பதில் இந்தியா 119 வது இடத்தில் உள்ளது .ஆனால் எரிசாராயம் குடிப்பதில் முன்னோடிகளாக {95 %} உள்ளனர், அதிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே 17 வது இடத்தில் உள்ளது . எனவே இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள ஒன்றுமில்லை . மேலும் தமிழ்நாட்டில் குடிப்பவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவுதான் .இதில் கவலைப்பட ஒன்றுமில்லை.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201723:02:13 IST Report Abuse

தமிழ்வேல் அப்போ டார்கெட்டை உயர்த்திடுவானுவோ....

Rate this:
Anandha Kumar - Bangalore,இந்தியா
20-ஜூன்-201719:15:38 IST Report Abuse

Anandha Kumarஇதுவும் தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்கும். இந்த அரசு இந்த வருமானத்தை ஈட்ட வெட்க பட வேண்டும். எத்தனை மக்களை குடிக்கு அடிமையாக்கி, கொன்று, இந்த பணத்தை சேர்க்கின்றனர். டாஸ்மாக் ஐ முடி விட்டு வேறு வழியில் இந்த பணத்தை சம்பாதிக்க முடியாது. இதை இந்த அரசியல்வாதிகள் விட மாட்டார்கள். ஏன் என்றால் மது சப்ளை செய்யும் ஆலைகள் முழுவதும் dmk, admk பிரமுகர்களுடையுது. நண்பர் ஒருவர் சொல்கிறார், தமிழ் நாட்டில் விற்பனையாகும் பீர் முழுவதும் போலியானதாம். மூக்கருகே வைத்து முகர்ந்து பார்த்தால் சாக்கடை வாசம் அடிக்குமாம், இதை குடிக்கிறவன் என்ன ஆவான். தமிழர்களின் தலை விதி, அல்லது சாப கேடு தான் இது.

Rate this:
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201716:50:11 IST Report Abuse

kmishகுடிக்கிறவன் குடிச்சிட்டு தான் இருப்பான் அதனால அரசாங்கம் கண்ட இடத்துல டாஸ்மாக்கை துறக்காம ஒரு மாவட்டத்துக்கு ஒரு இடத்துல மட்டும் ஒரு 5 ஏக்கர் பரப்பளவுக்கு டாஸ்மாக்கை துறந்து மக்கள் பணியாற்ற வேண்டும் , ஏன்னா இருக்குற அரசியல் வாதிங்களுக்கு மக்களுக்கு நன்மை எப்படி பன்றதுன்னு தெரியாதா முட்டாள்களா இருக்காங்க , அதனால இந்த வேலையே உருப்படியா பார்ப்பானுங்க

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201723:04:56 IST Report Abuse

தமிழ்வேல் ஆரம்பத்தில உரு எல்லையில் ஒத்தையடிப்பாதை இணைப்பிலதானே கல்லு சாராயக்கடை இருந்துச்சி ? இப்போ டவுனுக்கு ரெண்டு மூணுன்னு கொண்டுவந்தது அம்மாவோட கைங்கரியம்....

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201716:13:41 IST Report Abuse

Maverickகுடிப்பது எங்களின் உரிமை....கறி தின்னுவது போல.. அதையெல்லாம் தப்பு ன்னு சொல்ல புடாது.....அதுக்குள்ள அரசாங்கம் வரப்புடாது...நாங்க என்ன வேணா தின்னு குடிச்சு ..எப்படி வேணா இருப்போம்...அது தான் எங்க தற்போதைய கலாச்சாரம்..

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
20-ஜூன்-201715:48:39 IST Report Abuse

பஞ்ச்மணிஎன் அண்டை வீட்டார் மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் குடிப்பது கிடையாது அப்போ இத்தனை வியாபாரம் மற்றும் சாரய கடைகள் எதற்க்கு ?? அது மற்ற மாநிலதவர்கள் நலனுக்காக நம்மூரில் திறந்து வைத்துள்ளோம் ஏன்னா நம் தமிழ்நாட்டு மக்கள் ஞாயவாதிகள் விவரம் தெரிந்தவர்கள் (நான் உள்பட) ஆகவே மகாஜனங்களே இந்த சாரய கடைகள் யாவும் மற்ற மாநில சேவைக்கு மாத்திரமே தவிர நமக்காக அல்ல என்பதை நினைவு கொள்க

Rate this:
20-ஜூன்-201713:36:29 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இனி சாராயத்தையும் அரசாங்கமே உற்பத்தி செய்து விட்டால் இந்த லாபம் லட்சம் கோடிகளை தாண்டிவிடும் , ஆகவே ஒரு சிறப்பு சட்டம் மூலம் அனைத்து சாராய ஆலைகளையும் அரசுடமை ஆக்குங்கள்.

Rate this:
20-ஜூன்-201713:35:17 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்27 ஆயிரம் கோடி என்பது அரசாங்கத்திற்கு வந்த பணம் , சாராய ஆலையில் சரக்கு உற்பத்தி செய்து அரசுக்கு விற்ற பணத்தில் லாபம் எவ்வளவு திமுக மற்றும் அதிமுகவிற்கு. முக்கியமாக அதை சொல்லுங்கள். அது கண்டிப்பாக இதைவிட பலமடங்கு இருக்கும்.

Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201712:59:37 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிஇந்த வருமானம் என்பது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வருவாயில் மதுவை கொடுத்து சுரண்டப் பட்டது...

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஜூன்-201712:58:14 IST Report Abuse

Lion Drsekarஇலவச வீட்டில் இலவச அரிசி வாங்கி இலவச கிரைண்டரில் மாவரைச்சு இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு இலவச மின்விசிறியப் போட்டு இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தா இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி கலியாணம் பண்ணி இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று இலவச சத்துணவுடன் இலவச கல்வியும் நல்கி இலவச புத்தகம் இலவச சைக்கிள் இலவச செருப்பு இலவச சைக்கிள் இலவச லேப்டாப் இலவச பேருந்து பாசுடன் இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை? "மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது." PETROL PRICES AROUND D WORLD Pakistan. ₹ 26.00 Bangladesh ₹ 22.00 Cuba ₹ 19.00 Italy. ₹ 14.00 Nepal. ₹ 34.00 Burma. ₹ 30.00 Afghanistan. ₹ 36.00 Sri Lanka. ₹ 34.00 INDIA. ₹ 67 .80 How it comes to this...... Basic Cost per 1litre. 16.50 + Centre Tax. 11.80% + Excise Duty. 9.75% + Vat Cess. 4% + State Tax. 8% Total added up together becomes Rs 50.05 per 1 litre. + now another Rs 22. Extra. This 22/- extra for what no explanation for this. What a great job by the GOVT. Of INDIA வந்தே மாதரம்

Rate this:
sri - trichy,இந்தியா
20-ஜூன்-201714:22:13 IST Report Abuse

sriwoh, some much free items. i do not know these. i have not got any one. really people can go for getting these free instead of seaching for job. very good. further i feel govt should revise the target for this. they should provide some schemes like if you take one bottle then you will get some free vadai etc. they should do proper marketing once they enter to the business. further insteadof govt doing this business give this to pvt they will do in a better way. a free door delivery. delivery within half hour. these are good. also they can keep some price for largest consumer. i feel govt should enter into cigerette , bedi, gutka business as well. these are good profi one. all these non profit making schools and hospitals should be sold to pvt....

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201716:56:20 IST Report Abuse

தமிழ்வேல் சார், // Pakistan. ₹ 26.00 Bangladesh ₹ 22.00 Cuba ₹ 19.00 Italy. ₹ 14.00 Nepal. ₹ 34.00 Burma. ₹ 30.00 Afghanistan. ₹ 36.00 Sri Lanka. ₹ 34.00 // ஆனால், INDIA. ₹ 67 .80 .. இப்போது தெரிகின்றதா எதனால் இத்தனை நாடுகளும் பின்தங்கி இருப்பதன் காரணம் ?...

Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
20-ஜூன்-201717:25:53 IST Report Abuse

Dinesh Pandianபாக்கிஸ்தான் பெட்ரோல் 72 ரூபாய் (பாகிஸ்தானிய)-45 இந்தியன் ருபேஸ் .இத்தாலி எப்போ ருபேஸ் கு மாறுனாங்க...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201723:07:55 IST Report Abuse

தமிழ்வேல் இத்தாலியில் இன்றய விலை லிட்டர் 1 ,47 யூரோ அதாவது 105 ரூ...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்