வெங்காய குடோனான பள்ளிகள்; வியாபாரியாக மாறிய ஆசிரியர்கள் Dinamalar
பதிவு செய்த நாள் :
வெங்காய குடோனான பள்ளிகள்
வியாபாரியாக மாறிய ஆசிரியர்கள்

போபால்: மத்திய பிரதேசத்தில், வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளதால், அரசுப் பள்ளிகள் குடோன்களாகவும், ஆசிரியர்கள் வியாபாரிகளாகவும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெங்காய குடோன், பள்ளிகள், வியாபாரி, ஆசிரியர்கள்,  போபால், மத்திய பிரதேசம், அரசுப் பள்ளி, சிவராஜ் சிங் சவுகான், விவசாயிகள் போராட்டம், உண்ணாவிரதம்,  Onion Goodown, schools, Businessman, teachers, Bhopal, Madhya Pradesh, Government School, Shivraj Singh Chouhan, Farmers Strike, Fasting

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். மாநிலத்தில் இந்த ஆண்டு விவசாய உற்பத்தி பொருட்கள் அதிகம் விளைந்துள்ள நிலையில், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கக் கோரி, மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


போராட்டம் முடிவுஇந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இதில், சில விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் இருந்தார்.
விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் சவுகான் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

நிலைமை குறித்து வருத்தம்


இந்நிலையில், அதிகப்படியாக விளைந்துள்ள வெங்காயத்தை, விவசாயிகளிடம் இருந்து மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது;இதை, அரசுப் பள்ளிகளில் இருப்பு வைத்து, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு சாரா நிறுவனங்களிடம் விற்பனை செய்யவும், மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவை

Advertisement

கண்காணித்து, கற்றல், கற்பித்தல் நடைமுறைகளை மேலும் சிறப்பிப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும், ஜன் சிக் ஷா கேந்திராக்களில், வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெங்காயம் இருப்பு வைப்பு கணக்கு மற்றும் அதன் விற்பனை பணியில் ஈடுபட்டுள்ள, ம.பி., அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201717:39:32 IST Report Abuse

Giridharan Sமாணவர்கள் எப்பப் பார்த்தாலும் அழுதுகிட்டே தான் இருப்பார்கள்ன்னு சொல்லுங்கோ

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஜூன்-201717:28:01 IST Report Abuse

ganapati sbதமிழகம் போன்ற மாநிலங்களில் ஒரு பக்கம் விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு பிரச்சனை மபி போன்ற மாநிலங்களில் மறு பக்கம் அமோக விளைச்சலால் பிரச்சனை விவசாயம் மாநிலத்தின் கீழே வந்தாலும் மத்திய அரசு இதை ஒருங்கிணைக்க வேண்டும் விளைச்சல் குறைந்த சமயத்தில் இறக்குமதி செய்து ஏறும் விலையை கட்டுப்படுத்துவது போல விளைச்சல் மிகுந்த சமயத்தில் ஏற்றுமதி செய்தொ அண்டை மாநிலத்துக்கு கொடுத்தோ இறங்கும் விலையை பிரச்னையை சமாளிக்க வேண்டும்

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
20-ஜூன்-201716:46:55 IST Report Abuse

Jaya Ramithil keliyo kindalo thevayillai yenenil oru maanilathirkku pratchinai enil anaivarum kaikoduthuthan aahavendum, ithuve antha aasiriyakal vellathil sikki veedilanthu iruthal palyil thangavendiya soolal yerpattal ippadi kooruvarkala pattaal than anaivarukkum puthi varum sila jemangalukku pattum puthi varuvathillai

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X