சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்; தி.மு.க., வெளிநடப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா
நிறைவேற்றம் : தி.மு.க., வெளிநடப்பு

தமிழக சட்டசபையில், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., சட்ட மசோதா, நேற்று நிறைவேறியது. அதை, ஆய்வுக் குழுக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சட்டசபை,ஜி.எஸ்.டி., மசோதா, நிறைவேற்றம், தி.மு.க., வெளிநடப்பு

நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., வரி, ஜூலை, 1ல் அறிமுகமாக உள்ளது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், சட்டசபையில், மாநில ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பெரும்பாலான மாநிலங்கள் நிறைவேற்றி விட்டன.

இந்நிலையில், தமிழக சட்டசபையில், 2017க்கான, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் சட்ட முன்வடிவு, ஜூன், 14ல், அறிமுகம் செய்யப்பட்டது.
அது தொடர்பாக நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - அனிதா ராதாகிருஷ்ணன்: 2007ல், 'வாட்' வரி அறிமுகமான போது, முதல்வராக இருந்த கருணாநிதி, வணிகர்களுடன் கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதுபோல், வணிகர்களின் கருத்துக்களை, ஜி.எஸ்.டி., கவுன்சில்

அதிகாரிகள் கேட்க வேண்டும். இதில், சிறு வணிகர்களை பாதிக்கும் பல அம்சங்கள் உள்ளன. வணிகர்கள் வசதிக்காக, இதில், ஓராண்டு பயிற்சி ஆண்டாக இருக்க வேண்டும்.

குரல் ஓட்டெடுப்பு


காங்.,- விஜயதாரணி: வரிதாக்கல் செய்வதில் பிரச்னை ஏற்பட்டால், கைது என்றெல்லாம் இதில் கூறப்பட்டுள்ளது. அதனால், ஓராண்டு பயிற்சி அளித்த பின் அமல்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; ஒத்தி வைக்க வேண்டும்.
நிதி அமைச்சர் ஜெயகுமார்: தமிழக அரசு கூறிய மாற்றங்களை செய்த பிறகே இதற்கு ஒப்புக் கொண்டோம். ஜி.எஸ்.டி., கவுன்சில், மத்திய அரசு அமைப்பு அல்ல. அதில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் உள்ளனர். நாம் நம் கருத்துக்களை கூறினால், அதை நிச்சயம் பரிசீலிப்பர்.

வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி: 25 மாநிலங்கள், ஏற்கனவே இதை நிறைவேற்றிவிட்டன. எனவே, இதை நிறைவேற்றித் தர வேண்டும்.பின், சபாநாயகர் தனபால், மசோதாவை நிறைவேற்ற குரல் ஓட்டெடுப்பு நடத்தினார்.
அப்போது ஸ்டாலின், ''இதை சட்டசபை, ஆய்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்,'' என்றார். அதை மீறி, குரல் ஓட்டெடுப்பில் சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - காங்., - எம்.எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

சட்டத்தை முடக்க முடியுமா?:


ஜி.எஸ்.டி., சட்ட மசோதா, தி.மு.க., எதிர்ப்பை மீறி நிறைவேறியுள்ளது.

பிரச்னை இல்லை


'ஜி.எஸ்.டி., கவுன்சிலில், பெரும்பான்மை மாநிலங்கள் எதிர்த்தால், அச்சட்டத்தை நிறுத்தி வைக்க முடியும்' என, கூறப்படுகிறது.
இது குறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர், ஆதி.குமரகுரு கூறியதாவது: அரசியல் சட்ட திருத்தத்தின்படி, நாட்டில் உள்ள, 75 சதவீத மாநிலங்கள், ஜி.எஸ்.டி., மசோதாவை எதிர்த்தால், அதை தடுத்து நிறுத்த முடியும். ஆனால், காங்., ஆளும் மாநிலங்கள் உட்பட, 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள், அதை ஆதரித்து சட்டத்தை நிறைவேற்றிவிட்டன.
தமிழக சட்டசபையில் நிறைவேறாவிட்டாலும், பிரச்னை இல்லை. ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., அமலாவதில் தடை ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரி - Chennai,இந்தியா
20-ஜூன்-201719:58:23 IST Report Abuse

நரிவாசகர்களிடம் நல்ல மற்றம் தெரிகிறது, மக்களுக்கும் GST யின் அயோக்கியத்தனம் புரிகிறது. மக்களை கொள்ளை அடிக்கும் திட்டம் இது. ப. சிதம்பரம் செதுக்கிய ஆப்பில் மோடி உக்காந்து விட்டார்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-ஜூன்-201715:43:41 IST Report Abuse

BalajiGST யால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர போகிறது....... இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும்....... ஆனால் அவர்களைப்பற்றி இங்கு கவலை கொள்பவர்கள் யார் இருக்கிறார்கள்............

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:10:35 IST Report Abuse

Nakkal Nadhamuniதிமுக எல்லாத்துக்கும் வெளி நடப்பு செய்வதற்கு.. சட்டமன்றத்துக்கு வராமலேயே இருக்கலாமே... அங்கே கொஞ்சம் ட்ராபிக்காவது குறையும்... லூசு பசங்க...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:25:24 IST Report Abuse

Srinivasan Kannaiyaபா ஜ க வின் பினாமி ஆட்சிதான் ...... நிறைவேற்றவில்லை என்றால் மோடி பழனியை சும்மா விடுவாரா...

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
20-ஜூன்-201707:37:55 IST Report Abuse

சந்தோசு கோபுஒரு வழியா இந்த வருஷம் GDP சர்ருன்னு ஏற ஏற்பாடுகளை செய்துட்டாரு நம்ம மோடிஜி.. இனி 'பொருளாதாரத்தை முன்னேற்றிய எங்க மோடி வாழ்கன்னு' பக்தாள்ஸ் எல்லாம் கத்தி கதர்ற மாதிரி 500 கோடியில ஒரு விளம்பரத்தை ரெடி செய்ய வேண்டியது தான் பாக்கி.. ம்ம் ஜமாய்ங்க..

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
20-ஜூன்-201707:37:02 IST Report Abuse

சந்தோசு கோபுபினாமி அரசாங்கமாவது இதை நிறைவேற்றமா விடுறதாவது.. மோடி 'தண்ணின்னு' சொன்னா 'சொம்பா' நிக்கிறவங்களாச்சே..எடுபுடியாரும் 'திடீர் புனிதரும்'..

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
20-ஜூன்-201705:15:15 IST Report Abuse

தங்கை ராஜாபாஸ் உத்தரவிட்ட பிறகு மக்களாவது, வணிகராவது.........

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-ஜூன்-201704:13:25 IST Report Abuse

SIVA. THIYAGARAJANவெளி நடப்பு திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். செயல் அல்ல சுய நல செயல் என்னங்க இது>>>>.இதுக்கா>>>ஓட்டை வித்தார்கள்>>>>

Rate this:
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
20-ஜூன்-201703:33:23 IST Report Abuse

குஞ்சுமணி சென்னைபெண்களின் சானிட்டரி நாப்கின்களுக்கு, மாற்று திறனாளிகளின் பொருட்களுக்கு வரி போடும் ஜி எஸ் டி மசோதா கண்டிக்க தக்கது

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement