கூவத்தூர் பேரம் தொடர்பாக ஸ்டாலின் 'சிடி': ஆதாரமாக ஏற்க சபாநாயகர் தனபால் மறுப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கூவத்தூர் பேரம் தொடர்பாக ஸ்டாலின் 'சிடி' :
ஆதாரமாக ஏற்க சபாநாயகர் தனபால் மறுப்பு

சென்னை: ''எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அளித்த, 'சிடி'யை ஆதாரமாகக் கொண்டு, அந்த பிரச்னையை, சட்டசபையில் விவாதிக்க இயலாது,'' என, சபாநாயகர் தனபால், நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.

கூவத்தூர் பேரம்,ஸ்டாலின்,சிடி,ஆதாரமாக, ஏற்க, சபாநாயகர், தனபால், மறுப்பு


சபாநயகரிடம் சிடி:அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேரம் தொடர்பாக, வெளியான செய்தி குறித்து, சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் வலியுறுத்தினர்; அதை, சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் பேரம் தொடர்பான ஆதாரம் உள்ளதாகக் கூறி, 'சிடி' ஒன்றை, சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கி இருந்தார்.


இது தொடர்பாக, சபாநாயகர் தனபால் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க., உறுப்பினர்கள், 14ம் தேதி, ஒரு பிரச்னையை எழுப்ப முயன்றனர். என்ன
பிரச்னை என, என்னிடம் கூறி, முன்னரே அனுமதி கோரவில்லை. அவர்கள் எழுப்ப முயன்ற பிரச்னை,நீதிமன்றம் பரிசீலனையில் உள்ளது.

எனவே, 'நீதிமன்றத்தில் உள்ள பிரச்னை குறித்து, விவாதிக்கக் கூடாது' என தீர்ப்பளித்தேன்.
அடுத்த நாள், பத்திரிகையில் வந்த செய்தியை காண்பித்து, பிரச்னை எழுப்ப முயன்றனர்.
அன்றும் அனுமதிக்காததால், வெளிநடப்பு செய்தனர்.

பதில் அளிக்கிறேன்


அடுத்து, 16ம் தேதி, 'இதோ என் கையில் ஆதாரம் இருக்கிறது' எனக் கூறி, எதிர்க்கட்சித்
தலைவர் பிரச்னையை எழுப்பினார். குற்றச்சாட்டு குறித்த ஆதாரத்தை, சபாநாயகரிடம் முன்னரே அளித்து, அனுமதி பெற்ற பின்னே,உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்ப முடியும். எனவே, 'ஆதாரத்தை அறையில் வந்து தாருங்கள்; அதை பார்த்த பின், பதில் அளிக்கிறேன்' என, தெரிவித்தேன்.

'சிடி' கொடுத்தார்.


ஸ்டாலின் சார்பாக, உறுப்பினர் பிச்சாண்டி, என் அறைக்கு வந்து, ஆதாரமாக ஒரு, 'சிடி' கொடுத்தார்.

Advertisement

அதை போட்டு பார்த்த போது, அதுவும் ஒரு ஊடகச் செய்தியின் நகல் என்பது தெரிய வந்தது. மறுநாள் பிச்சாண்டி, மற்றொரு, 'சிடி' கொடுத்தார். அதில், ஆங்கில, 'டிவி' ஒன்றில் வெளியான காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
ஊடகச் செய்தியை ஆதாரமாக வைத்துவிவாதம் நடைபெறக் கூடாது என்பதற்கு, ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளேன்.
எனவே, 'சிடி' செய்தியை ஆதாரமாகக் கொண்டு, அந்த பிரச்னையை, இங்கே விவாதிக்க இயலாது. இனி, உறுப்பினர்கள், இது சம்பந்தமாக பேச வேண்டாம். இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-201723:19:53 IST Report Abuse

அப்பாவிஇது போன்ற ஆதாரங்கள் ஏற்கப் படக் கூடாது. நமது தமிழக சிரிப்பு போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

Rate this:
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
20-ஜூன்-201720:39:49 IST Report Abuse

Ramachandran CV Ramachandranமாண்புமிகு சபாநாயகர் அவ்ர்களே. ஊடக செய்திகளை நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் வேறு எதை வைத்து மக்கள் உங்களை நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் நம்பும் பி ஜே பி யின் உண்மை முகம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தெரியவரும். அப்போது உங்களுக்கும் சேர்த்து ஆப்பு வைக்கப்படும். அதற்குள் நீங்கள் வாங்கிய ..........ஐ பினாமி பெயரில் மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வருமானவரி ரெய்டு உங்கள் வாசகதவையும் தட்டும் தட்டும் தட்டும்.

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூன்-201713:54:32 IST Report Abuse

Rafi சட்ட மன்றத்தில் ஊடக செய்திகளை வைத்து தான் பல முறை விவாதம் நடந்துள்ளது.

Rate this:
20-ஜூன்-201713:30:57 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்சுடாலின் என்ன கொடுத்தாலும் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பிறகு ஏன் இந்த நாடகம்.

Rate this:
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
20-ஜூன்-201713:18:50 IST Report Abuse

Mayilkumarஊர் உலகத்துக்கே தெரிந்த விஷயம். கூவத்தூர்ல டங்காமாரி ஊதாரி பாட்டுல்லாம் வேற போட்டாங்க மற்றும் குத்தாட்டமெல்லாம் சூப்பர். உங்கள் படம் அதில் வரவில்லையா? கோபப் படாதீங்க அடுத்த வீடியோவில தெளிவா எடுத்திடுவாங்க, இப்போ இதை விவாதத்திற்கு எடுத்து கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள்.

Rate this:
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201712:49:00 IST Report Abuse

kmishஊடகம் எடுத்ததை ஒத்துக்க மாட்டினா முதல் சட்டசபைல கேமரா பொறுத்து, அதுக்கு வக்கு இல்லையாம், ஆனா நோட்ட மட்டும் சொல்லுவ, சபாநாயகர் பதவி இப்ப எல்லாம் ஜால்றா அடிக்கிற பதவியா ஆயிடுச்சு

Rate this:
20-ஜூன்-201712:25:35 IST Report Abuse

PrasannaKrishnanPoda.............

Rate this:
20-ஜூன்-201712:25:35 IST Report Abuse

PrasannaKrishnanPoda.............

Rate this:
20-ஜூன்-201712:25:35 IST Report Abuse

PrasannaKrishnanPoda.............

Rate this:
20-ஜூன்-201712:25:35 IST Report Abuse

PrasannaKrishnanPoda.............

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement