இடைத்தேர்தல் பணம் பட்டுவாடா வழக்கு; முதல்வர் - ஸ்டாலின் வாக்குவாதம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தல் பணம் பட்டுவாடா வழக்கு
முதல்வர் பழனிசாமி- ஸ்டாலின் வாக்குவாதம்

சென்னை :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், வழக்கு பதிவு செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது தொடர்பாக, சட்டசபையில் நேற்று, முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். அதில் அதிருப்தி தெரிவித்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இடைத்தேர்தல், பணம், வழக்கு, முதல்வர், ஸ்டாலின், வாக்குவாதம், சென்னை, ஆர்.கே.நகர்,  வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன்,  சட்டசபை, முதல்வர் பழனிசாமி ,எதிர்க்கட்சிகள், வெளிநடப்பு, By-election, money, case, chief minister, stalin, argument, Chennai RK Nagar, Income Tax Department, Election Commission, Assembly, Chief Minister Palanisamy,


சட்டசபையில் நேற்று, கேள்வி நேரம் முடிந்ததும் நடந்த விவாதம்:


எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: தேர்தல் கமிஷன் ஒரு அறிக்கையை, தலைமை செயலருக்கு அனுப்பி உள்ளது. அதில், முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளதாக, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, பதில் வந்துள்ளது.சபாநாயகர் தனபால்: இது தொடர்பாக, நீங்கள் கொடுத்த ஆவணங்கள், பரிசீலனையில் உள்ளன. எனினும், நீங்கள் தகவல் கோரிய அடிப்படையில், முதல்வர் பதிலளிப்பார். அப்போது, தி.மு.க., - உறுப்பினர்கள் எழுந்து, 'ஸ்டாலின் பேச அனுமதிக்க வேண்டும்' என, கோரினர்.

வழக்கு பதியப்பட்டுள்ளதா

அதற்கு சபாநாயகர் மறுக்க, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.சபாநாயகர்: நீங்கள் ஆவணங்களை, காலை, 9:30 மணிக்கு கொடுத்தீர்கள். அதனால், முழு விபரம் கேட்க,

நேரம் போதுமானதாக இல்லை. எனவே, இதை விவாதிக்க இயலாது; தகவல் கோர மட்டுமே அனுமதிக்க முடியும்.
ஸ்டாலின்: முதல்வர், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, ராஜு,
தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்யும்படி, ஏப்., 15ல், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதா; வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல் துறை,முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், வழக்கு பதிவு செய்யப்படுமா; முறையான விசாரணை நடைபெறுமா?
அதை தொடர்ந்து, ஸ்டாலின் பேசியதும், தன் பதில் கருத்தும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

புலன் விசாரணை


முதல்வர் பழனிசாமி: வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர், இந்திய தேர்தல் கமிஷனில், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு செய்தார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சம்பவம் தொடர்பாக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்ற விபரங்களை கேட்டுள்ளார். அது குறித்தே, எதிர்க்கட்சி தலைவர், காங்., சட்டசபை தலைவர் ஆகியோர் பிரச்னை எழுப்பி உள்ளனர்.
இந்திய தேர்தல் கமிஷன் அறிக்கையில், வருமான வரித்துறை சோதனையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்த போது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அதிகாரியே, முதல் தகவலறிக்கை பதிவு செய்வதற்கு ஏதுவாக, புகார் மனு அளித்திருந்தது. இது தொடர்பாக, பெருநகர்குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற்று, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு, புலன் விசாரணையில் உள்ளது.
இவ்வாறு முதல்வர் கூறியதும், தி.மு.க.,வினர் கோஷங்கள் எழுப்பினர். ஸ்டாலின் எழுந்து, ''நேற்று எந்த தகவலும், எனக்கு வரவில்லை என, முதல்வர் தெரிவித்திருந்தார்.

Advertisement

இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறார்; அதிலும், முழு விபரம் தெரிவிக்கவில்லை,'' எனக்கூறி வெளிநடப்பு செய்தார்.
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர். அவர்களை தொடர்ந்து, காங்., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

தேர்தல் முறைகேடு: தி.மு.க., மீது வழக்கு


எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த பின், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, தேர்தல் முறைகேடு தொடர்பாக, தி.மு.க., மீது, 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 12 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பானவை. நான், நேற்று பேட்டி கொடுத்ததாக கூறுகின்றனர்.
இப்பிரச்னை தொடர்பான விபரங்களை கேட்டு, தற்போது பதில் கூறியிருக்கிறேன். இவர்கள் தினமும் சட்டசபைக்கு வருவதும், ஏதேனும் ஒரு பிரச்னையை எழுப்புவதும், அதில் ஏதேனும் கிடைக்குமா என்றும் எதிர்பார்க்கின்றனர்; நிச்சயம் எதுவும் கிடைக்காது.
ஜெ., அரசு, நான்கு ஆண்டு காலம், மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-201723:10:09 IST Report Abuse

அப்பாவிமு.லீக்கிற்கு 2 தொகுதி நிச்சயம்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-ஜூன்-201715:21:25 IST Report Abuse

Balajiஆளும் கட்சியும் சரியில்லை எதிர்க்கட்சியும் சரியில்லை........ இதை இப்போது தான் உணருகிறார்கள் தமிழர்கள்......... விரைவில் நல்லது நடந்தால் நன்றாக இருக்கும்.......... தமிழகத்தின் தற்போதைய தேவை ஜனாதிபதி ஆட்சி...........

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:20:15 IST Report Abuse

Nakkal Nadhamuniதமிழ்நாடு அரசியல் எப்படி இருக்கிறது என்றால்... பார்த்த அறுவையான படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு... உப்புமில்லை சப்புமில்லை... குப்பைக்கு போகவேண்டிய கும்பல்...

Rate this:
Thalapathy - devakottai,இந்தியா
20-ஜூன்-201713:13:21 IST Report Abuse

Thalapathyதொளபதிக்கு ஐடியா கொடுப்பதை யாரப்பா? குண்டக்க மண்டக்க ஐடியா கொடுக்கிறார்.

Rate this:
20-ஜூன்-201723:13:02 IST Report Abuse

அப்பாவிவேற யாரு.....துரைமுருகன் தான்... ஆளு எப்பிடி கும்முனுகீறார் பாத்தியா? கிழிஞ்சாலும் ஸ்டாலின் சட்டைதான் கிழியும்...இவருக்கு ஒண்ணும் ஆகாது. அதேமாதிரிதான் பேராசிரியர்...கலிஞர் கூடவே வருவாரு...அடி கிடி படாம பாத்துக்குவாரு....

Rate this:
Sridharan - Chennai,இந்தியா
20-ஜூன்-201712:33:29 IST Report Abuse

SridharanDo we need to rule the Tamil Nadu by politician. Please implement President Rule for 10 years to save Tamil Nadu.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201709:52:57 IST Report Abuse

Kasimani Baskaranஓட்டுக்கு 2000 என்று கொடுத்த ஸ்டாலின் தான் மட்டும் யோக்கியன் போல நாடகம் ஆடுவது அக்கிரமம்... இரண்டு கூட்டமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல.

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
20-ஜூன்-201722:10:24 IST Report Abuse

SARAVANAN Gஇரு தினங்களுக்கு முன்பு நான் சொன்னதற்கு தாங்கள் கூறிய "எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி " - அதாவது இரு திராவிட கட்சிகளும் ஒன்று தான் என்று தாங்கள் கூற முயற்சிப்பது எனக்கு புரிகிறது. .விமர்சனம் செய்யும் போது திமுக -வை மட்டும் எதிர்மறையாக விமர்சிப்பதும் , அதிமுக பல தவறு செய்யும் போதும் , அதனை விமர்சனம் செய்ய துணிவும் , மனமும் இல்லாமல் "இந்த திராவிட கட்சிகளே இப்படி தான்யா" என்று தங்களை போன்றோர் நடுநிலை வாதிகள் என்று காட்டிகொள்ள முயற்சிப்பதும் எதனால்? திரு ops அவர்களுக்கு மெரினா-வில் , இரவு நேரத்தில் கிடைத்த "மெரினோதயம்" போல தங்களுக்கும் ஏதாவது "ஞானோதயம்": கிடைத்து விட்டதோ என்று நினைப்பதில் தவறென்ன இருக்கிறது....தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே.........

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
20-ஜூன்-201709:50:08 IST Report Abuse

Ramaswamy Sundaramசுடலை இனி என்ன செய்வதா உத்தேசம்? பேசாம உங்க அப்பர் பண்ணாமாதிரி பீச்சல ஏர் குலர்.... காலையில நாஷ்டா பண்ணிட்டு மத்தியானம் வரைக்கும் உண்ணாவிரதம் இருங்களேன்? விளம்பரம் கிடைக்கும் இல்ல? சும்மா சட்டசபைக்கு உள்ளே போறதும் வெளில வரத்தும் ...இந்த வெள்ளாட்டு ஜனங்களுக்கு அலுத்து போச்சுப்பா....புதுசா எதுனா பண்ண தேவலை?

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
20-ஜூன்-201722:18:43 IST Report Abuse

SARAVANAN Gஅதெல்லாம் ரொம்ப பழசு சார் .... உங்க அதிமுக கோமாளிகள் தினமும் போடுற நாடகத்தை பார்த்து ஸ்டாலின் ஏதாவது கத்துக்கிட்டா சரி ......

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
20-ஜூன்-201722:41:55 IST Report Abuse

SARAVANAN Gகலைஞராவது தன் மகனுக்கு நாலு பேர் நம்பும் படி நாடகம் போட கற்று கொடுத்தார் என வைத்து கொள்வோம் ... தங்களின் கொடநாடு, தன்னுடைய ஆட்டு மந்தையில் வளர்க்க பட்ட அடிமைகளுக்கு கற்று கொடுத்தது எல்லாம் , கேள்விக்குறி ( ? ) இதை போல முதுகு வளைந்து கார் டயரை நக்குவதும் ( கூல கும்பிடு போடுவது ), மண்சோறு சாப்பிடுவதும், அதிக பட்சம் போனால் டேபிளை தட்டுவதும் தானே ........

Rate this:
Dhanaprabhu - Coimbatore,இந்தியா
20-ஜூன்-201709:19:29 IST Report Abuse

Dhanaprabhuதிருமங்கலம் என்ற கிராமத்தை தத்து எடுத்து ஊழல் என்ற ஊற்றுக்கண்ணனை திறந்து வித்திட்ட பெரும் புகழ் பெற்ற பெருமகனார் அல்லவோ உங்கள் தலைவன் .... ஓட்டுக்கு பணம் என்ற வியாக்கியானத்தை பண்ண ஒரு யோக்கியதை வேண்டும். அந்த யோக்கியதை தங்கள் கட்சிக்கு உண்டா என்பதை உறுதி படுத்திக் கொண்டு களத்தில் (குளத்தில்) இறங்குங்கள் தொளபதி .... இல்லையேல் அசிங்கம் என்ற அரக்கனாகிய முதலை தங்களை அலேக்காக கவ்வி கொண்டு போய்விடும் ....ஆனால் தாங்களோ அந்த முதலையை பற்றி முதலே யோசித்திருந்தால் முச்சந்தியில் வந்து முக்காடு போட்டு முணுமுணுத்துக் கொண்டு முட்டி போட்டு உட்கார்ந்திருப்பீர்..

Rate this:
sam - Doha,கத்தார்
20-ஜூன்-201709:08:11 IST Report Abuse

samஇவர் எதை சபை குறிப்பில் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று தெரிய வில்லை. அதிமுக கட்சி கூட்ட அறிக்கை மட்டும் தான் சபை குறிப்பில் இருக்க வேண்டும் என்று கூறுவார். இதை விட கேவலம் வேறு எந்த மாநில சட்டசபையிலும் நடக்காது

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:23:42 IST Report Abuse

Srinivasan Kannaiyaபழனி எப்பிடி பிரச்சினையை எதிர்கொள்ளுகிறார் என்று பார்க்கிறார்கள் போல...

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement