சொல்கிறார்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : ஜூன் 19, 2017
Advertisement
  சொல்கிறார்கள்

எதற்கும் ஏங்க மாட்டார்கள்!
கல்வியை சுவாரஸ்யமாக்குவது குறித்து கூறும், தனியார் பல்கலைக்கழக இணைவேந்தர் ஆர்த்தி கணேஷ்: எல்லாக் குழந்தைகளுமே, மழலை மேதைகள் தான். அவர்களின் மூளையை சரியான வழியில், 'ட்யூன்' செய்துவிட்டால், வேகமாக தயார் ஆகி விடுவர்.
ஒன்றரை வயதில் இருந்தே, அவர்களுக்கு பிடித்த மாதிரி அதை சொல்ல வேண்டும்; திணிக்கக் கூடாது.இன்றைய பாடத்திட்டம் திணிப்பு அடிப்படையில் இருப்பதால் தான், படிப்பின் மேலேயே பிடிப்பு இல்லாமல் போகிறது.தங்களுக்கு உதவாத படிப்பை பிள்ளைகளும் கடைபிடிப்பதை விரும்பாத பெற்றோர் தான், மதிப்பெண் மட்டுமே படிப்பு இல்லை என்பதை உணர்ந்து, 'பிராக்டிகல்' படிப்பு முறைக்கு, தங்கள் குழந்தைகளை மாற்ற ஆரம்பித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு பிராக்டிகலாக சொல்லிக் கொடுக்கப்படும் எதுவும், ஆழமாக மனதில் பதியும். ஒரு கட்டுமானம் எப்படி இருக்க வேண்டும் என்பதை, வரி வரியாகச் சொல்வதை விடவும், 'உன் வீட்டை நீயே கட்டலாம்' என்று, 'பிளாஸ்டிக் பிளாக்' கொடுத்து விட்டால், தங்களுக்கே உரிய கற்பனை சக்தியோடு அவர்கள் வடிவமைப்பதைப் பார்க்க முடியும்.
அவர்களின் தேவை, எதிர்பார்ப்பு அதில் வெளிப்படும். அவர்களின் சுதந்திரம் வெளிப்படுவதால், அதை சுமையாகப் பார்ப்பதில்லை; ஆர்வத்தோடுபங்கேற்கின்றனர்.அதேபோல, இந்த உலகத்தில் தனி மனித சாதனைகளாகவே இருந்தாலும், அவை, பிறரது துணையோடு தான் நிகழ்த்தப்படுகின்றன என்பதை குழந்தைகள் தாங்களாகவே புரிந்து, பிறரையும் இணைத்துக் கொள்கின்றன.
வீட்டில் இருக்கும் போதே, நான்கு குழந்தைகளை இணைந்து விளையாடச் சொன்னால், இதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.இதேபோல், குழந்தைகள் தங்களைத் தாங்களே அறிமுகம் செய்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். எப்போதும், நம்மை விட நம்மைப் பற்றிச் சொல்ல வேறொருவர் இல்லை என்பதான உலகில், சுய அறிமுகம் மிக மிக முக்கியம் தானே!
பிறரை மதிக்கவும், தங்களுக்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கவும் கற்பிப்பது, அவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும். உதாரணத்துக்கு, குழுவாக இசைப்பது என்று முடிவெடுத்து, 'அவனுக்குப் பின் நீ பாட வேண்டும், உனக்கான வரிகள்இது; இந்த இசைக்குப் பின் உன் குரல் வரும்.
சரியா...' என்று கூறி விட்டால், அவர்கள் மிகச் சரியாக அதைப் புரிந்து செயல்படுவர். தங்களைத் தாங்களே நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்பது, அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடும்.நம்மிடம் ஒரு விஷயம் இல்லை என்றால், அது நமக்கானதில்லை என்று புரிந்து கொள்ளவும், அதைப் பிறரிடம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதையும் உணர்த்தி விட்டால், எதிர்காலத்தில் அவர்கள் எதற்கும் ஏங்க மாட்டார்கள்.
இந்த வகை கல்வியைப் பயிலும் குழந்தைகளின் பெற்றோரும், பிற குழந்தைகளோடு ஒப்பிடுகையில், தங்கள் குழந்தைகளின் அறிவாற்றல் பல மடங்கு உயர்ந்திருப்பதைப் பார்த்து பிரமிக்க முடியும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை