சனா: ஏமன் நாட்டில் சடா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையை குறி வைத்து சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தையில் வேலை பார்த்த அப்பாவி பொதுமக்கள் என்றும், ஊர் திரும்பிய சுற்றுலா பயணிகள் சிலரும் இதில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.