Baby born on flight to India gets free plane tickets for life | விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்| Dinamalar

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
விமானம், குழந்தை, இலவச பயணம், ஜெட் ஏர்வேஸ்
Share this video :
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் இலவச பயணம்

புதுடில்லி : சவுதி அரேபியாவிலிருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானப் பயணம் செய்வதற்கான அனுமதியை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

அந்த பெண்ணின் நலன்கருதி, அப்பெண்ணின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், விமானத்தில் இருந்த நர்ஸ் உதவியுடன் குழந்தை பிரசவிக்கப்பட்டது. தாய் மற்றும் பச்சிளங்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு, விமானம் மும்பைக்கு தரையிறக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விமானத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் இலவச விமானப்பயணம் மேற்கொள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அனுமதி அளிப்பதாக ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201706:18:38 IST Report Abuse
Giridharan S அப்போ கூட போற அவங்க அப்பா அம்மாவுக்கு எவன் காசு தருவான். ஒருவேளை அந்த குழந்தை பெரிசாகி சவுதி ல வேலைக்கு சேர்ந்தா அப்போ தினமும் நம்ம டவுன் பஸ்ல போற மாதிரி கேரளாவிலிருந்து வேலைக்கு போய்ட்டு வரலாம் அரசு அனுமதித்தால் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-ஜூன்-201722:16:28 IST Report Abuse
bal பிறந்த இடம் சான்றிதழ் பெறுவதில் சங்கடம் ஏற்படும்
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
19-ஜூன்-201721:10:09 IST Report Abuse
rajarajan குழந்தை பிறக்கும் நிலையில் உள்ள கர்ப்பிணியை எப்படி விமானத்தில் ஏற அனுமதித்தார்கள். இதை மூடி மறைக்கவே இந்த சலுகை
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
19-ஜூன்-201721:07:09 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழ்வேல்...அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கென்றே சர்வதேச சட்டங்கள் உள்ளன.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201701:15:22 IST Report Abuse
தமிழ்வேல் அப்படி ஒன்றும் இல்லை. அமெரிக்காவில் மட்டுமே உள்ளது அதன்படி அமெரிக்காமேல் பறக்கும்போது பிறந்தால் அமெரிக்க குடிஉரிமையைக் கேட்கலாம். அதாவது கேட்க உரிமை உண்டு (கொடுப்பதும் கொடுக்காததும் அவர்களது விருப்பம். கடலிலோ (கப்பல்) வானத்திலோ (விமானம்) வெளிநாட்டில் அல்லது சர்வதேச ஏரியாவில் பிறந்தால் பெற்றோரின் குடிவுரிமையே செல்லும் என பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், பதிவில் பிறந்த இடம் கேட்கும்போது என்ன எழுதுவார்கள் ? இடத்தின் பெயரை எழுத்துவதற்குப்பதில் நாட்டின் பெயரை எழுத்துவார்களோ ?...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-201720:30:09 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல உபசரிப்பு. பாராட்டுக்கள். நல்ல வேலையாக உள்நாட்டில் பிறந்துள்ளது. வெளிநாட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது வேறு ஒரு நாடுமேல் செல்லும்போது பிறந்தால் குடி உரிமை பிரச்சனை வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.