நில ஆவணத்திற்கு ஆதார்: பி.ஐ.பி., மறுப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நில ஆவணத்திற்கு ஆதார்: பி.ஐ.பி., மறுப்பு

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நில ஆவணம், ஆதார் எண், சுற்றறிக்கை, மத்திய அரசு, மாநில அரசுகள், டிஜிட்டல் மயம், புதுடில்லி, வங்கி கணக்கு, பினாமி சொத்துக்கள்,மத்திய பத்திரிகை தகவல் மையம்,பிரான்க் நோரோனா, பி.ஐ.பி, Land Document, Aadhaar Number, Circular, Central Government, State Governments, Digital, New Delhi, Bank Account, Proxy assets, Press Information Bureau, Frank Norona, PIB

புதுடில்லி: அனைத்து நில ஆவணங்களுடனும், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை போலியானது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய பத்திரிகை தகவல் மையம் எனப்படும் பி.ஐ.பி., தெரிவித்துள்ளது.நில ஆவணங்களுடன் ஆதார் இணைப்பு இல்லை

சுற்றறிக்கை

பினாமி பெயர்களில் சொத்துக்களை குவிப்பதை தடுக்க, அனைத்து நில ஆவணங்களையும் ஆக., 14ம் தேதிக்குள் டிஜிட்டல்மயமாக்க வேண்டும்; நில ஆவணங்களுடன் நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

தற்போது அந்த தகவலை மத்திய அரசின் பி.ஐ.பி., மறுத்துள்ளது. இது குறித்து பி.ஐ.பி.,யின் முதன்மை செய்தி தொடர்பாளர் பிரான்க் நோரோனா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ' அது போன்ற ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை. அந்த சுற்றறிக்கை போலியானது; விஷமத்தனமானது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஜூன்-201708:14:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கவர்மென்ட் ரெஜிஸ்ட்ரார் ஆபிசிலே சும்மாவே ....க்குறாங்க. இப்படி லெட்டர் இருக்கு, இல்லைன்னு சொல்லி குழப்பி விட்டால் கூடவே கழுத்தையும் சேர்த்து அறுப்பாங்க
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201720:46:11 IST Report Abuse
நாகூரான் ஆமாம்... ஆமாம்... இணைக்காதிங்க. அப்புறம் கஷ்டப்பட்டு திருடி சொத்து சேர்த்தவர்கள் ரொம்ப சிரமப்படுவார்கள்... பாவம்...
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
19-ஜூன்-201719:17:19 IST Report Abuse
Srikanth Tamizanda.. தமிழன் என்றாலே மடையர்கள் என்று பொருள் போலிருக்கிறது. மோடி பண மதிப்பு இழப்பு செய்ததற்கு​ முக்கிய காரணம் தேச பாதுகாப்பு (போலி நோட்டு தடுக்க) என்று பல முறை விளக்கியும், இதை புரியாமல் புலம்புவது தமிழ்நாடு ஒன்று மட்டுமே. மற்ற மாநிலங்களில் (கேரளம் தவிர) மோடி அரசின்​ ஆதரவு பெருகியே இருக்கிறது. இந்த யதார்த்தத்தை தமிழர்கள் புரிந்து கொண்டால் அது தமிழ் நாட்டுக்கு நல்லது.. இல்லையா திராவிட அரசியல் துதி பாடி பிச்சை எடுக்க வேண்டியதுதான்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201718:53:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதுக்கும் மறுப்பு தரமாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்? இப்படி செய்வதே இந்த அரசின் வாடிக்கை ஆகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201718:37:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதானே பார்த்தேன்.. என்னடா கார்ப்பரேட்டுக்கு பாதகமா போகுதேன்னு. அதானிக்கு அள்ளிக்கொடுத்த பல்லாய்ஞ் ஹெக்டேர் நிலத்துக்கு யாரோட ஆதார் எண்ணை போடுவாங்க. இங்கே அதனியோட சூரிய மின்திட்டம்ன்னு வெந்நீரும், நாத்தமும் திருடிக் கொடுத்த பத்தாயிரம் ஏக்கர் நிலத்துக்கு அடி பத்திரமே இல்லையே, பொறம்போக்கையெல்லாம் வளைச்சி போட்டிருக்கமேன்னு நினைச்சிருப்பாய்ங்க. அதான்..
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
19-ஜூன்-201718:15:11 IST Report Abuse
kmish நான் சொல்லல மோடி இதுல ஒன்னும் பண்ண மாட்டாருன்னு , ஏன்னா அரசியல் வாதி அதிகாரிங்க மாட்டிப்பாங்களாம் அதனால இது சும்மா அறிக்கையும் , இவரு நாட்டை முன்னேத்துறாராம்
Rate this:
Share this comment
Cancel
abdul rajak - trichy,இந்தியா
19-ஜூன்-201717:26:02 IST Report Abuse
abdul rajak இப்படி சட்டம் வந்தால் அரசியல்வாதிகளுக்கு தான் பிரச்னை . எனவே இதை சட்டமாக்க விட மாட்டார்கள் எல்லா கட்சி ஆட்களும் . பாவம் பொது மக்கள் .
Rate this:
Share this comment
Cancel
appavi - cumbum,இந்தியா
19-ஜூன்-201717:25:49 IST Report Abuse
appavi பா ஜா க என்பதே பாவப்பட்ட ஜனங்களை போட்டுதள்ளு என்பதாகும் ...கடந்த 3 ஆண்டுகளில் நம் நாடு எதில் என்ன முன்னேற்ற்றம் கண்டுள்ளது
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஜூன்-201718:17:38 IST Report Abuse
Pasupathi Subbianஎன்னைய்யா இதில் பாவப்பட்ட ஜென்மங்கள் எங்கே வருகின்றனர். எதிலாவது படித்து தெளிவு படுத்திகொண்டு அப்புறம் கருத்து பதியுங்களேன். இல்லை ஒட்டு மொத்தமாக நீங்கள் பி ஜெ பியை வெறுக்கிறீர்கள், அதற்க்கு ஆதரவு இல்லை என்று ஒரே பேச்சாக கூறிவிட்டு, வீட்டுக்குள் போய் முடங்கிவிடுங்களேன். சும்மா வெறுப்பேற்றிக்கொண்டு , எரிச்சலாக உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
19-ஜூன்-201717:09:22 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா திட்டமிட்டே இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடம் நடவடிக்கை தேவை. இந்த குரூப் கிளப்பிவிட பல வதந்திகள் இன்றளவும் உலா வருகிறது. உதாரணங்கள் : 10 ரூபா நாணயம் செல்லாது ,,,,,மோடி 15 தருவேன்னு சொன்னது ...... பிளாஸ்டிக் அரிசி .....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:01:55 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஹி ஹி... அதானே பார்த்தேன்... பாஜக விலேயே மலை விழுங்கிகள் ஏராளமா உள்ளனர்...அவர்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரமா பினாமி யில் இருந்து வெளிவந்து விடுவார்களா என்ன?... அது மட்டும் அல்ல, இது போன்ற திட்டங்களில் தலையை சுற்றி மூக்கை தொடுவதே பாஜகவின் வேலை... கருப்பு பணம் உள்ளவர்களை மட்டும் கண்டறியாமல், நோட்டை முடக்கி சாமானியனை நடுத்தெருவில் நிற்க வைத்தார்கள்.. கருப்பு பண முதலைகள் ஒருவர் கூட நடுத்தெருவுக்கு வரவில்லை... அதுபோல ஆவணங்களை ஆதாரோடு இணை என்று சொல்வதால், சாமானியர்களாகிய நாம் தான் லஞ்சம் கொடுத்து, அதனை இணைக்க கியூவில் நிற்க வேண்டும்... பணமுதலைகள் தப்பித்து கொள்ளும்.. எதிர் கட்சியினரை மிரட்டவே பாஜக இதனை கொண்டு வரும்... உண்மையிலேயே பாஜகவுக்கு ஊழலை ஒழிக்க அக்கறை இருந்தால், என்ன செய்ய வேண்டும்... பினாமி , மற்றும் பவர் பத்திரப்பதிவு செல்லாது என்று ஒரே வரியில் சட்டம் போட்டாலே, பணமுதலைகள் மாட்டிக்கொள்ளும்...ஆனால் அதனை செய்யாமல் , நாம் எல்லாரும் ஆதாரோடு இணைக்கணுமாம்.. பாஜக , சாமானியனுக்கு துரோகத்துக்கே மேலே துரோகம் செய்துவருகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை