வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு புதிய சலுகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு புதிய சலுகை

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (11)
Advertisement
விமான நிலையம், வெளிநாடு, புதுடில்லி, இந்தியா, குடியுரிமை படிவம், ,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,மத்திய அரசு ,Airport, abroad, New Delhi, India, Citizenship Form, Ministry of External Affairs, Central Government

புதுடில்லி : இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு செல்லும் பயணிகள் இனி, 'எம்பார்கேஷன்' எனப்படும், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள், 'எம்பார்கேஷன்' அல்லது 'டிப்பார்சர் கார்டு' எனப்படும் குடியுரிமைத்துறை படிவத்தை பூர்த்தி செய்வது அவசியமாக உள்ளது. இந்த படிவத்தில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி மற்றும் வெளியூர் சென்றதிற்கான காரணங்களை விளக்க வேண்டும்.
இதனால், பயணிகள் விமானத்திற்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜூன், 14 அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வௌிநாடு செல்லும் பயணிகளின் காலதாமதத்தை குறைக்கும் வகையில், ஜூலை, 1ம் தேதி முதல், வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், 'எம்பார்கேஷன்' எனப்படும், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு நிம்மதி

இந்த அறிவிப்பு, விமான பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். மற்றபடி, கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது.
ஏற்கனவே, 2014ம் ஆண்டு, வௌிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு, குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போதுள்ள நடைமுறையில், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், 'விசா' மற்றும் டிக்கெட் பெற, தங்களது விபரங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், குடியுரிமைத்துறை சோதனையில், சம்பந்தப்பட்ட நபரின் விபரங்கள் சோதனை செய்து பதிவு செய்யப்படுகிறது. மேற்கூறிய காரணங்களே போதுமென்ற அடிப்படையில், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyaperumalg - Villupuram dist sahdevan pettai,இந்தியா
06-ஜூலை-201709:22:14 IST Report Abuse
Kaliyaperumalg Good
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
19-ஜூன்-201720:23:43 IST Report Abuse
yaaro நான் பல பேருக்கு எழுதி குடுத்திருக்கேன்....பல முறை பாஸ்போர்ட் எடுத்து நம்பர் சொல்ல வேண்டி இருப்பதால் ..பாஸ்ப்போர்ட்டை பத்திரமாக உள்ளே வைத்திருப்பவர்கள் அடிக்கடி அதை வெளியே எடுக்க வேண்டியதில்லை...போர்டிங் பாசை எடுத்து பிளைட் நம்பர் தேட வேண்டியதில்லை..
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
19-ஜூன்-201719:12:27 IST Report Abuse
Renga Naayagi விமான டிக்கட் வாங்கும்போதே பெரும்பாலான விவரங்கள் நிரப்பப்படுகின்றன ... தேவையில்லாத வேலை ...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
19-ஜூன்-201718:23:01 IST Report Abuse
sundaram தேவையில்லாத விளம்பரம் . இந்த படிவத்தில் கேட்கப்படுவது பாஸ்போட் எண், பெயர், விமான எண் மற்றும் பயணிக்கும் தேதி ஆகியவை தான். இதை பூர்த்தி செய்வதால் தாமதம் என்பதெல்லாம் காதில் தோட்டம் போடும் வேலை. ஒரு வேளை இந்த படிவங்களில் உள்ள தகவல்களை கணினிக்கு மாற்ற உள்துறை அமைச்சக ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள் போலும். அவர்களுக்கு சலுகை வழங்குகிறோம் என்று வெளிப்படையாக சொல்ல துப்பில்லாமல் பயணிகளின் தாமதம் என்று சரியான புத்தூர் கட்டு போடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
19-ஜூன்-201717:25:34 IST Report Abuse
Dol Tappi Maa நல்ல விஷயம் . வயதானவர்கள் தனியாக பயணம் செய்யும் போது இந்த படிவங்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்குகினறன .
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201717:21:46 IST Report Abuse
Giridharan S A good news to all foreign goers. its nothing to do with poor
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:11:36 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இதெல்லாம் ஒரு சலுகையா? அய்யஹோ
Rate this:
Share this comment
Cancel
Sathasivan - Chennai,இந்தியா
19-ஜூன்-201717:09:05 IST Report Abuse
Sathasivan ரெம்ப நல்ல செய்தி
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
19-ஜூன்-201716:08:19 IST Report Abuse
Balaji இதை வரவேற்கலாம் என்றாலும் இந்த படிவத்தை பூர்த்தி செய்வதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்பது சுத்த சப்பைக்கட்டு........... இது எழுதி முடிக்க 3 முதல் 5 நிமிடங்கள் கூட ஆகாது............
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
19-ஜூன்-201716:07:32 IST Report Abuse
Nagaraj நல்ல செய்தி ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை