ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கொலை மிரட்டல்| Dinamalar

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கொலை மிரட்டல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ம.பி., மணல் குவாரி, பெண் ஐ.ஏ.எஸ்., கொலை மிரட்டல், போபால், சோனியா மீனா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பந்திலா கைது, கலெக்டர் அபிேஷக் சிங், Woman IAS, Murder Bullet, Bhopal, Sonia Meena, 
Sand quarry, Chief Minister Shivraj Singh Chouhan, Pandilla arrested, Collector Abhishek Singh, Madhya Pradesh
Share this video :
பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கொலைமிரட்டல்

போபால்: ம.பி., மாநிலத்தில் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மணல் குவாரி மாபியாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மணல் குவாரி மீது நடவடிக்கை

ம.பி., மாநிலத்தில், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வருபவர் சோனியா மீனா. இவர், 2013ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பேட்ஜை சேர்ந்தவர். இவர், ம.பி., மாநிலம்,சத்தார்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றிய போது ராஜ்நகர் என்ற இடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மணல் குவாரி மீது நடவடிக்கை எடுத்தார். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் சோனியா மீனா, உமாரியா மாவட்டத்திற்கு கூடுதல் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இந்த சூழ்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தலைமை செயலாளருக்கு சோனியா மீனா கடிதம் எழுதியுள்ளார். அதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:



கொலை மிரட்டல்

மணல் குவாரி மீது பிப்., 6ம் தேதி நடவடிக்கை எடுத்த போது, என் மீதும், என் பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அர்ஜுன் சிங் பந்திலா என்பவன் துப்பாக்கி முனையில் எங்களை மிரட்டினான். இச்சம்பத்திற்கு பிறகு பந்திலா கைது செய்யப்பட்டு சாதார்பூர் சிறையில் அடைக்கப்பட்டான். எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு சாதாபூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நாங்கள் சாட்சியாக ஆஜராக வேண்டும். அப்போது எங்கள் மீது தாக்குதல் நடத்த, பந்திலா திட்டமிட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோனியா மீனாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக உமாரியா மாவட்ட கலெக்டர் அபிேஷக் சிங் தெரிவித்தார்.






Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201717:22:10 IST Report Abuse
Susainathan dont spoiling your life just resign the job because gents getting only for murder but girls getting both its not good society never support anyone so its very difficult
Rate this:
Share this comment
Mohana - Dublin,அயர்லாந்து
19-ஜூன்-201718:37:08 IST Report Abuse
Mohanaஎவ்வெளவு கீழ் தனமான சிந்தனை உங்களுடையது. I feel sorry for the ladies in your family. People like you are the disgrace to the community....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
19-ஜூன்-201716:03:33 IST Report Abuse
Syed Syed அசிங்கம் கேவலம். டிஜிட்டல் இந்தியாவின் செயல்கள் . நாட்டின் தேசத்துரோகி விஜய் மல்லையாவுக்கு குடுக்கும் பாதுகாப்பு. நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் செயல் படும் அதிகாரிகளுக்கு இதுதான் அன்பளிப்பு டிஜிட்டல் இந்தியா.. GOD BLESS YOU MADEM. GOD PROTECT YOU AND SAVE YOU . ஆமீன்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-201715:55:04 IST Report Abuse
Endrum Indian செய்தியை படித்தால் தெளிவாகத்தெரிகின்றது. "முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை". அப்படின்னா நம்ம ஊருலே எந்த மந்திரியும்/அரசியல்வாதியும் இந்த மாதிரி உத்தரவு போடுவதில்லையா? அப்படித்தான் ஊர்ஜிதம் ஆகின்றது. இளங்கன்று பயமறியாது. சின்னப்பொண்ணு தானே அதனால் வருவது வரட்டும் என்று நடவடிக்கை. ஆசீர்வாதங்கள். இதை முதல் முயற்சியாக நினைத்து இதை போலவே இனிமேல் தொடரவும்.
Rate this:
Share this comment
Cancel
அபிமன்யு - chennai,இந்தியா
19-ஜூன்-201715:32:04 IST Report Abuse
அபிமன்யு எவனா இருந்தா எனெக்கென்ன என்று செயல் படு சகோதரி....வெற்றி நிச்சயம்.. சரித்திரத்தில் ஒரு இடமும் நிச்சயம்...
Rate this:
Share this comment
Pillai Rm - nagapattinam,இந்தியா
19-ஜூன்-201718:37:39 IST Report Abuse
Pillai Rmஆள் போயிட்டா சரித்திரத்தில் ஒரு இடமும் நிச்சயம்......
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201715:31:14 IST Report Abuse
அப்பாவி சே...அங்கேயுமா மணல் மாபியா?
Rate this:
Share this comment
Cancel
மணி மாறன் - chennai,இந்தியா
19-ஜூன்-201715:27:00 IST Report Abuse
மணி மாறன் ம.பி லதான் பிஜேபி ஆட்சியில் எல்லாமும் பாலும் தேனும் ஓடுது.. ஊழலே இல்லை என்று சொன்னார்களே.. அங்கேயும் மணல் கொள்ளை தானா ?? இங்கே இருக்கற பிஜேபி காரனுங்க என்னமோ மணல் கொள்ளை இங்கே மட்டும் நடக்குற மாதிரி புலம்புறானுங்க
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201715:14:19 IST Report Abuse
Giridharan S தைரியசாலி பொண்ணுமா நீ. இதெல்லாம் வரும்னு தெரிஞ்சுதான் நீங்க வந்திருப்பீங்க. ஆண்டவனை நம்புங்க அவன் எப்பவும் கை விடமாட்டான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.