பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்| Dinamalar

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (215)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த், பீகார் கவர்னர், அமித்ஷா

புதுடில்லி : ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கான பா.ஜ., ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்திற்கு பிறகு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தற்போது பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக அறிவித்தார்.


உபி.,யை சேர்ந்தவர்

இவர் உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். வழக்கறிஞரான இவர், 2015 ஆகஸ்ட் 8 ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 1945, அக்., 1 ம் தேதி கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ., தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71. இவர், ஜூன், 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமித்ஷா தெரிவித்தார். பா.ஜ., தங்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டதால் காங்கிரசும் தங்களின் வேட்பாளரை எந்த நேரத்திலும் வெளியிடலாம் அல்லது பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (215)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Bangalore,இந்தியா
20-ஜூன்-201716:34:52 IST Report Abuse
Indian அத்வானி மேல் நம் போராளீஸ் வைத்திருக்கும் பாசம் புல்லரிக்கவைக்கிறது. இதே செகுலர்ஸ் வாஜ்பாயீயை போற்றினர் அத்வானியை தூற்றினர் அத்வானியை போற்றினர் மோடியை தூற்றினர். இன்னும் சிறிது காலம் போனதும். மோடியை போற்றுவர் யோகியை தூற்றுவர். அறிவுஜீவிகள், கம்யூனிஸ்ட்கள், கலை துறையினர், மீடியா, லுட்யன்ஸ் elite ஆதிக்கம் இவ்வாறு குறைந்துகொண்டே போகும்.
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
20-ஜூன்-201710:00:07 IST Report Abuse
Prakash JP மத்திய கேபினெட் அமைச்சராக ஆ.ராசா இருந்தாரே.. அவர் தலித் தானே.. அதோடு, இருபது ஆண்டுகளுக்கு முன்பே, தலித் வகுப்பை சேர்ந்த கே.ஆர். நாராயணன்னை, இதே குடியரசு தலைவராக ஆகியது காங் & திமுக போன்ற கட்சிகள் தான்..
Rate this:
Share this comment
Cancel
S.J.ANANTH - Nagercoil,இந்தியா
20-ஜூன்-201708:19:45 IST Report Abuse
S.J.ANANTH அத்வானி என்ற ஒரு பழுத்த அனுபவம் வாய்ந்த ஒருவர், கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றிய ஒருவரை புறக்கணித்து வேறு ஒருவரை தெரிந்தெடுக்க காரணம் என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
Mariappan Rajangam - tamilnadu,இந்தியா
20-ஜூன்-201707:51:11 IST Report Abuse
Mariappan Rajangam இந்த மாதிரி ஒரு பெரிய பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர் ஒரு முன்னோடியா இருந்தால் நாட்டுக்கு நல்லது .VAJBAYEE IS THE GREAT MAN HE ELECTED THE RIGHT ONE.NOW MODI JI KYA KAR RAHEY HAI APP
Rate this:
Share this comment
Cancel
Mariappan Rajangam - tamilnadu,இந்தியா
20-ஜூன்-201707:46:08 IST Report Abuse
Mariappan Rajangam பிஜேபி-க்கு தேவை ஒரு வாயில்லா பூச்சி கோவிந்தன் மாட்டிகிட்டாரு ஏற்கனவே அந்த பதவி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இப்ப .......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:43:45 IST Report Abuse
Srinivasan Kannaiya ராம்நாத் கோவிந்தை என்ற சின்ன மீனை போட்டு பெரிய திமிங்கலத்தை பிடிக்கலாம் என்ற எண்ணம்...
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
20-ஜூன்-201709:41:56 IST Report Abuse
sivan பெரிய திமிங்கிலம் எது கன்னையா? பிரதிபா படேல் மாதிரி ஜனாதிபதி மாளிகையில் இருந்து எடுத்துக் கொண்டு செல்வதா? தன்னுடைய உறவினர்களையெல்லாம் மக்கள் செலவில் உலக சுற்றுலா அழைத்து செல்வதா? அப்படி உலக சுற்றுலா அனுபவித்ததின் பலனாக, அதற்கு கைமாறாக சோனியா பிரியங்கா அவரது கணவர், மற்றும் கனிமொழி, ஆ.ராசா போன்றோரை கொள்ளை அடிக்க விட்டதையா? எதை திமிங்கிலம் என்கிறீர்கள்? நாம் எவ்வளவு மானம் கெட்டு பேசினாலும், காங்கிரசுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உரைப்பதே இல்லை. இங்கும் அதே நிலைதான். எவ்வளவு பேசினாலும் சசிகலா அன் கோவுக்கு உரைப்பதே இல்லை. தன் தவறை மறைக்க பிஜேபி யை பார்த்து " நீ திருடன் நீ திருடன் " என்று கத்திக் கொண்டு இருந்தாலும் சோனியா அன் கோ அடித்த இமாலய கொள்ளைகள் இல்லை என்று ஆகி விடுமா?...
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
20-ஜூன்-201703:52:09 IST Report Abuse
Suresh நல்ல தேர்வுபோல் உள்ளது, பிரதீப பாட்டிலை போல் ஊர் மக்களையும் கூட்டிக்கொண்டு மக்களுடைய வரி பணத்தில் ஊர் சுத்தி பார்க்காமல் இருந்தாலே போதுமானது..தினமலர் தலித் என்ற வார்த்தையை தவிர்த்து முன்னோடியாக இருந்திருக்கலாம் இது இன்டர்நெட் காலம்...
Rate this:
Share this comment
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
20-ஜூன்-201700:43:38 IST Report Abuse
Hari Krishnan பிஜேபி யின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்விற்கு பின்..நமது டமிலர் டொலர்கள் புதுசாக ஒரு ஜாதியைய் உருவாக்கிவிட்டனர் - ஆர்ய தலித்..நல்ல வேளை Dr. APJ வுக்கு ஆர்ய இஸ்லாமியர் என்று ஒன்றை உருவாக்காமல் விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
19-ஜூன்-201723:15:15 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இங்கே தலித் போராளிகள் போல கருத்து எழுதியவருள் எத்தனை பேர் உங்கள் வீட்டு கழிவுநீர் தொட்டியை (Septic Tank) நீங்களே சுத்தம் செய்கிறீர்கள் ? அல்லது உங்கள் வீட்டிற்கு முன்னாள் உள்ள சாக்கடையை நீங்களே சுத்தம் செய்கிறீர்கள் ? எத்தனை பேர் பிச்சையெடுக்கும் ஏழை தலித்துக்களை உங்கள் வீட்டிற்குள் அனுமதித்து உணவு பரிமாறுகிறீர்கள் ? அல்லது எத்தனை பேர் தங்கள் வீட்டு பெண்ணை நரிக்குறவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளீர்கள் ? வெளியே பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாக போராடுவதை போல நடிப்பது, உள்ளே அரசியலும் செய்து சலுகைகளையும் அனுபவிப்பது. பி.ஜெ.பி யாவது நேரடியாக நீங்கள் கூறும் ஹிந்துத்துவதை ஆதரிக்கிறது. பிற மத, ஜாதி, மொழி, இன அரசியல் காட்சிகள் என்ன செய்து கிழித்தார்கள் என்று எங்களுக்கு தெரியும்..
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
20-ஜூன்-201703:26:08 IST Report Abuse
Dol Tappi Maaநீங்கள் ஏன் ஜாதியை உருவாக்கினீர்கள் ? உலகத்திலியேயே இந்தியாவில் தான் இப்படி ஜாதி பாகுபாடு உருவாக்கப்பட்டு உள்ளது ....
Rate this:
Share this comment
20-ஜூன்-201706:27:11 IST Report Abuse
இராசேந்திரன்.நல்ல பதிலடி,மன்டையில ஆணி இறக்குன மாதிரி இருக்குது.ஐாதிய போராட்டங்களால் உயா்ந்துவிடலாம் என நினைத்து,இழிவைத்தொடும் சுயநலவாதிகள்.சகோதரத்தை உணர மறந்தவா்கள்....
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
19-ஜூன்-201722:56:25 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நம் நாட்டில் ஜனாதிபதியின் அதிகாரம் வெறும் ஏட்டளவில்..ரபபர் ஸ்டாம்ப் பதவிக்கு தலித் அல்லது சிறுபான்மையினம் ,உயர் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி என்று யாராயினும் எதுவும் கிழிக்கப்போவதில்லை .அரசியல் கட்சியில் தொண்டனுக்காவது ரூ. 500 /- . பிரியாணி பொட்டலம் , போகவரச்செலவு என்று ஒருவகையில் பயன் இருக்கும் .பாமர மக்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம் . கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் ,அம்பையர் ,மற்றும் அதை சார்ந்தோர்க்கு நல்ல வருமானம் கிடைக்கும் .அதை வேடிக்கை பார்க்கும் ரசிகர்களுக்கு வேதனையும் ,பணச்செலவும் ,காலவிரயம் தான் மிச்சம்.ஆளும் .மத்திய அரசுக்கு ஏதேனும் இடர்பாடு வந்தால் அதனை தடுத்து காத்து முட்டுக்கொடுக்க ஒரு காவலன் வேண்டும் .அவர்தான் ஜனாதிபதி.
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
20-ஜூன்-201709:54:52 IST Report Abuse
sivan நம் நாட்டில் உள்ள பிரச்சினையே , பாமர மக்கள் என்று யாருமே இல்லாததுதான். நம் மக்கள் எல்லோருமே அரசியல் சார்பு உள்ளவர்கள்தான்.ஒன்று ஊழல் காங்கிரசை ஆதரிப்போம். அல்லது நாம் எந்த ஜாதியை சேந்தவரோ அவரை ஆதரிப்போம் . அல்லது நாம் எந்த மதத்தை சார்ந்தவரோ அந்த மதகுரு சொல்வதை கேட்டு , ஊழல் கட்சிகளை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவோம் .இதை விட்டால் நமக்கு பிடித்த நடிகருக்காக ஒட்டு போடுவம். அல்லது துட்டு வாங்கிய 500 ரூபாய்க்கு கர்மா சிரத்தையாக குடும்பத்தோடு சென்று ஒட்டு போடுவோம். எல்லாவற்றையும் விட்டால், எவனாவது வருவான் ஆகாவழி பயல்கள்... தமிழ் ...தமிழர்.. தமிழ் உணர்வு என்று கூவிக் கொண்டு ... அவன் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறான் என்று தெரியாமலேயே அவனுக்கும் ஒட்டு போடுவோம். நாம் என்று அரசியல் வாதியாக இருப்பதை நிறுத்துகிறோமோ அன்றுதான் நமக்கு விடிவு காலம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை