3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு: முதல்வர் அறிவிப்பு| Dinamalar

3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு: முதல்வர் அறிவிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
முதல்வர் பழனிசாமி, 110 விதி, சட்டசபை, பள்ளி கல்வித்துறை, ஸ்மார்ட் வகுப்புக்கள், சென்னை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள்,  அரசு கல்லூரி, 
Chief Minister Palanisamy, 110 rule, assembly, school education Department, Smart Classes, Chennai, High School, Higher Secondary School,
Computer labs, smart classrooms, government college,
Share this video :
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு: முதல்வர் அறிவிப்பு

சென்னை : 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.அவை, * உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.* பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம். * எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு* 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.* 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.* காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்.* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.
பிற துறை அறிவிப்புக்கள் :
* மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.* வனத்துறை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.* கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kmish - trichy,இந்தியா
19-ஜூன்-201718:50:49 IST Report Abuse
kmish இருக்குற தனியார் பள்ளியை எல்லாம் அரசு பள்ளியா ஆக்கிட்டா எல்லா பள்ளியும் ஸ்மார்ட் பள்ளியா ஆகிடும் ஒரே சட்டத்தில் , இந்த பணத்தை தனியார் பள்ளி நடத்துனவங்க கிட்ட கொடுத்து கணக்கை முடிச்சிடுங்க
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201716:09:25 IST Report Abuse
இந்தியன் kumar அறிவிப்பெல்லாம் பலமாய் தான் இருக்கிறது ஆனால் செயல்பாடெல்லாம் ஸிரோவாகத்தான் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
19-ஜூன்-201715:49:42 IST Report Abuse
Syed Syed இவருடைய திட்டங்கள் அனைத்தும் வேடிக்கையாகத்தான் இருக்கு. மக்கள் எங்கே இவரை இறக்கிவுட்டுடுவாங்களோனு பயந்து பொய் திட்டங்களை அல்லி விசுரர். ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆவது என்பது உறுதி.. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது ஆசிரியர்களே மாணவர்களை ரப்பே சேதுவிடுகிறார்களே இதற்கு உடனே அந்த சம்பந்த பட்டே வரகு வேலை நீக்கம்.செய்டாதுண்டா. பனி மாற்றமடைந் செய்கிறார்களே தவிர.ஒருவருக்கும் தண்டனை கொடுத்ததே இல்லை. இதில் வேறே ஸ்மார்ட் கிளாஸ் . எப்படி மாணவர்களை கவர் பண்றதுனு சொல்லிகுடுக்கவா.
Rate this:
Share this comment
Cancel
abdul rahman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201714:45:18 IST Report Abuse
abdul rahman முதல்ல அரசு பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறைகளை கட்டிக்கொடுங்கள், நீங்களும் உங்கள் ஸ்மார்ட்டும்.
Rate this:
Share this comment
Cancel
jesithambi -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201713:46:36 IST Report Abuse
jesithambi முதல்ல அரசு பள்ளிகளில் குழந்தைகள் படிப்பதற்க்கு வசதியாக மேசை பெஞ்ச் கொடுங்கள்
Rate this:
Share this comment
abdul rahman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201714:41:56 IST Report Abuse
abdul rahmanசுகாதாரமான கழிப்பறையும் வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201713:24:11 IST Report Abuse
Giridharan S நல்ல வரவேற்கத்தக்க அறிவிப்புதான் அதுக்கு முன்னாடி நம்ம பசங்களையும் ஆசிரியர்களையும் ஸ்மார்ட்டாக இருப்பதற்கு training குடுத்தா நல்லது
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
19-ஜூன்-201713:21:26 IST Report Abuse
Mayilkumar எல்லாம் சரி. தாங்கள் எப்பொழுது ஸ்மார்ட் முதல்வராக செயல்பட உள்ளீர்கள். உங்கள் சக சட்டமன்ற உறுப்பினர்களையும் எப்படி ஸ்மார்ட்டாக செயல் பட வைப்பீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.