நில ஆவணங்களுக்கு ஆதார் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நில ஆவணங்களுக்கு ஆதார் கட்டாயம்

Updated : ஜூன் 19, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நில ஆவணம், ஆதார் எண், சுற்றறிக்கை, மத்திய அரசு, மாநில அரசுகள், டிஜிட்டல் மயம், புதுடில்லி, வங்கி கணக்கு, பினாமி சொத்துக்கள், Land Document, Aadhaar Number, Circular, Central Government, State Governments, Digital, New Delhi, Bank Account, Proxy assets

புதுடில்லி: வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ள மத்திய அரசு, நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறியுள்ளது. இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பினாமிகள் சொத்துக்கள் குவிப்பதை தடுக்க, நில உரிமையாளரின் ஆதார் எண்ணை, நில ஆவணங்களுடன் இணைப்பது சரியான செயல் என மத்திய அரசு கருதுகிறது. இதன் மூலம் நில ஆவண பதிவில் வெளிப்படைதன்மையை கொண்டு வர முடியும். நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, அதனுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், வங்கி கடன் வாங்குவது எளிது, பயிர் காப்பீடு செய்வதும் எளிது எனவும் கருதப்படுகிறது.


நில ஆவணங்களுடன் ஆதாரை இணைக்க அரசு முடிவு

டிஜிட்டல் மயமாக்கமத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ' 1950ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும் அது விவசாய நிலம் அல்லது விவசாய பயன்பாடு இல்லாத நிலம், வீடுகள் என எதுவாக இருந்தாலும், ஆக., 14ம் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். அத்துடன் நில ஆவணங்களுடன், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற( தடுப்பு) திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாக கருதப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
19-ஜூன்-201720:07:13 IST Report Abuse
samkey இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் நடைமுறையில் ஆகஸ்ட் 14 க்குள் எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் ஜெயாவின் சொத்துக்கள் யார் பேருக்கு போகும்? 509 சொத்துக்களில் யார் பெயரை போடுவது? இன்னும் கோதாவில் இறங்கி தொடை தட்டிக்கொண்டு சுற்றி சுற்றி வருகின்றனரே தவிர மோதிக் கொள்ளவில்லை. மோடி அம்பயரின் விசிலுக்காக காத்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
19-ஜூன்-201717:23:28 IST Report Abuse
jysen Even to go to the public toilet aadhaar will soon become mandatory
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
19-ஜூன்-201716:12:11 IST Report Abuse
Syed Syed மொத்தத்தில் மக்களின் இருந்தே கொஞ்ச நெஞ்சே நிம்மதியும் போய்டுச்சி.. இப்படி பார்த்த கார்பொரேட் முதலாளிகளிடம் தன இப்பேற்பட்ட சொத்துக்கள் இருக்கும். ஏழைகளிடமிருந்து புடுங்கீ கார்பொரேட் முதலைகளுக்கு குடுப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
19-ஜூன்-201715:38:27 IST Report Abuse
Gopi இத மட்டும் வெற்றிகரமா செஞ்சிடுங்க எல்லா ஏழைகளும் (ஏழை விவசாயி , வீடு இல்லாதோர் ) மனமார வாழ்த்துவங்க. அனைவருக்கும் வீடு விவசாயத்துக்கு நிலம் என்பது நனவாகிவிடும். பின்னர் இந்த அடுத்தவன் சொத்தை ஆட்டயப்போடும் திருட்டு அரசியல் ஆசாமிகள், ரவுடிகள் , வீடு ப்ரோக்கர்கள் , கட்டிட காண்ட்ராக்டர், வீடு வாங்க கட்ட வட்டிக்கு பணம் கொடுக்கும் வங்கிகள் எல்லாம் அடக்கி வாசிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
19-ஜூன்-201715:01:54 IST Report Abuse
kmish ஒழுங்கா உருப்படியா இந்த வேலையை மோடி செஞ்ச அடுத்த முறை ஆட்சிக்கு வரலாம் , இல்லை இதுலயும் சாதாரண மக்களை வதைச்சா , அப்புறம் மோடி திட்டத்துல பத்தோடா பதினொன்னா சேர்ந்து மண்ணை கவ்வனும் , இனி அதிகாரிகளோட அனைத்து நிலத்தோட சொத்து தெரிஞ்சிடும் எத்தனை பேரு லஞ்சத்துல வாங்கி குவிச்சானுங்கன்னு
Rate this:
Share this comment
Cancel
AURPUTHAMANI - Accra,கானா
19-ஜூன்-201714:55:34 IST Report Abuse
AURPUTHAMANI இது நல்ல விஷயம்,மேலும் இதன் மூலம் நமது சொத்தை நமக்கு தெரியாமலே விற்பது கஷ்டம் ,நிம்மதி,அடுத்தது இங்கு கருத்து பெரும்பாலும் ஆதரவாகவே உள்ளது,ஒருவரை தவிர.வரவேற்போம்
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஜூன்-201714:43:40 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN போலி ஆதார் கார்டு ஏதேனும்
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஜூன்-201714:42:47 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பல திருடர்களை கண்டு பிடிக்க சில சட்டட திட்டங்களை கொண்டு வருவது வரவேற்ககூடியதே. ஊழலை ஒழிப்பதே மோடியின் லட்சியம். தேர்தல் வாக்குறிதியில் மிக முக்கியமானது இது தான், நல்லவர்கள் நீடூடி வாழனும். >>>>
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
19-ஜூன்-201714:25:19 IST Report Abuse
makkal neethi தொழில் அதிபர்கள் முன்னாள் இந்நாள் அரசியல் கட்சி பொறுப்புதாரிகள் மந்திரிமார்கள் எம் எல் ஏ க்கள் எம் பி க்கள் கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் இவர்களின் சொத்துக்களை ஒரு நிர்ணைக்கப்பட்ட காலக்கெடுவில் முதலில் ஆதார் நம்பருடன் இணைத்து சரிபார்த்து இந்தியாவின் எத்தனை விழுக்காடு சொத்துக்கள் இவர்களிடம் உள்ளது என்பதை முதலில் தெளிவு படுத்திவிட்டு மீதி உள்ள சொத்துக்களுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் உரிமையும் இல்லை என்பதை உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டு மற்ற மக்களை அவர்களின் சொத்துக்களை ஆதாருடன் இணைக்க சொல்வதே நல்லது ..அப்பொழுதுதன் உண்மை வெளிவரும்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201714:13:27 IST Report Abuse
தேச நேசன் உதாரணமாக ஒரு மிகப்பெரிய பாரம்பரியமுள்ள கார்போரேட்டின் நிலத்தை 2 ஜி லஞ்சமாக (மிரட்டித்தான்) இணைவியின் கனிவான மகள் தனது எலெக்ட்டிரீசியன் பெயரில் பெற்றுள்ளார் நில உரிமையாளர் பெயர் மாற்றம் முழுவதுமாக நடப்பதற்குமுன் இது வெளிவந்துவிட்டது அந்த இடத்தில அதே கார்போரேட்டின் அலுவலகம் இன்னும் உள்ளது தற்போதைய உரிமையாளர் யார்(அம்ம்மாடி??) என்பதே தெரியவில்லையெனக்கூறி அந்நிறுவனம் இடத்துக்கான வாடகையை(??)கோர்ட்டில் கட்டிவருகிறது உரிமையாளர் Tata காட்டிவிட்டாரோ என்னவோ ஆதார் கட்டாயமென்றால் 500 கோடி பெறுமான அந்நிலமே அனாதையாகிப்போகும். அரசுக்கு சொத்து சேரும். இதுதான் மேஜிக்
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
19-ஜூன்-201714:30:08 IST Report Abuse
Dol Tappi Maaஅந்த கார்பொரேட் சும்மா ஒரு இடத்தை கொடுத்துவிடுவான ? அவர்களும் ஊழல் கூட்டாளிகள் தான். பிரச்சனை என்று வந்தால் அவர்கள் சமரசம் செய்து கொள்வார்கள் . ஏனென்றால் கார்பொரேட் கம்பெனிகள் வளர்ந்ததே அரசாங்க சொத்து சலுகை காங்ற்றச்ட் மற்றும் அவர்களுக்கு வேண்டிய அரசியல் வாதிகள் தான் . காங்கிரஸ் அத்தாட்சியை சில கார்பொரேட் வளைந்தது இப்போ மோடி ஆட்சியில் சில கார்பொரேட் வளர்கிறது . விஜய் மல்லயா சொத்துக்கள் எல்லாம் தனி நபர் பெயரிலே உள்ளது ? அம்பானி அதானி போல் பனாமா நிறுவங்களில் உள்ளது . ஆதார் சட்டம் சில சின்ன மீனை பிடிக்கலாம் ஆனால் ஊழல் கார்போரேட்டை ஒன்னும் செய்ய முடியாது . ஏனென்றால் அதன் பங்குகள் வேறு ஒரு கம்பெனி வைத்து இருக்கும், தனி நபர் பெயரில் இருக்காது ....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201715:44:16 IST Report Abuse
தேச நேசன் கம்பெனிப் பெயரில் இருந்தாலும் ஆவணங்களில் அதன் ப்ரோமோட்டர்/ எம் டி யின் ஆதார் கட்டாயம் கூட்டு வியாபரங்களில் முக்கிய கூட்டாளி ஆதார் அவசியம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை