முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விசாரணையை சந்திக்க வேண்டும்; ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விசாரணையை சந்திக்க வேண்டும்; ஸ்டாலின்

Updated : ஜூன் 19, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆர்.கே.நகர், பணபட்டுவாடா, திமுக, ஸ்டாலின், சட்டசபை, தமிழகம்,   சென்னை ,தேர்தல் கமிஷன், சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிசாமி, புலன் விசாரணை, அமைச்சர் விஜய பாஸ்கர்,  ராஜினாமா, RK Nagar, Cash Flows, DMK, Stalin, Assembly, Tamilnadu, Investigation, Chennai, Election Commission, Speaker Dhanapal, Chief Minister Palanisamy, Minister Vijaya Bhaskar, Resignation,

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.


திமுக வெளிநடப்பு

அப்போது, தேர்தல் கமிஷன் உத்தரவின்படி முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடராதது ஏன் என கேள்வி எழுப்பினர். அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விட்டு இது குறித்து விவாதம் நடத்த முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். மேலும் தகவல் கோரல் முறையின்படி முதல்வர் இது குறித்து விளக்கம் அளிப்பார் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

முதல்வர் பதவி விலகவும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் பழனிசாமி தனது பதில் உரையில்; ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் திமுகவினர் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வழக்குகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கு ஆகும். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். ஆனால் இது திருப்தி அளிக்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


முறையான விசாரணை வேண்டும்


சட்டசபைக்கு வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்; தேர்தல் கமிஷன் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினேன். அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. தொடர்ந்து ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். காவல் துறையை கையில் வைத்து கொண்டு நியாயமான விசாரணை நடத்த முடியாது. தெம்பு இருந்தால் முதல்வரும், அமைச்சர்களும் பதவி விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
19-ஜூன்-201716:35:31 IST Report Abuse
Balaji உண்மையில் வாக்கு பெறுவதற்காக பணமளிப்பதை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய கட்சி இதை எதிர்த்து போராடுகிறதாம்....... இந்த இடைத்தேர்தலிலேயே இவர்களும் வாக்காளர்களுக்கு பணமளித்திருக்கிறார்கள் என்பதை அப்பகுதி மக்களிடம் கேட்டால் தெரியும்......... என்னமோ உத்தமர் வேடமிடுவது திமுகவுக்கு சற்றும் எந்த விஷயத்திலும் பொருந்தாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் தொளபதி அவர்களே.............
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-201716:12:56 IST Report Abuse
இந்தியன் kumar திமுக அதிமுக இருவரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் தான் , இதில் யாருக்காவது மாற்று கருத்து இருக்க முடியுமா ???
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
20-ஜூன்-201711:35:26 IST Report Abuse
parthaஅவர்கள் கொடுப்பதை வெட்கமில்லாமல் வாங்குவதும் தன்மான தமிழர்கள்தான்...
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201714:46:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆட்சியை கலைத்துவிட்டு பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்தப்படவேண்டும். 6 மாதம் கழித்து தேர்தல் வைத்து கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஜூன்-201714:35:00 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ரொம்ப நல்ல எண்ணம். அண்ணா எப்போ ஓய்வான் திண்ணை எப்போ காலியாகும்னு
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஜூன்-201714:34:12 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கெடு வான்கேடு நினைப்பான் – பெரியோர் சொல்வர்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-201713:41:46 IST Report Abuse
தமிழ்வேல் தேர்தல் ஆணைய உத்தரவை மறைத்து இதுவரையிலும் வழக்குப் பதியாதது தவறு.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஜூன்-201713:32:16 IST Report Abuse
Rafi மாநில தேர்தல் கமிஷனும் ஏன் அமைதியா இருக்க வேண்டும், பாவம் சபாநாயகர் எவ்வளவு தான் சமாளிக்கவேண்டியிருக்கு. இனி கோர்ட் தான் நேரடியாக தலை இட்டு வழக்கு பதிய வைக்கும் நிலை ஏற்படும், ஒரு தேர்தலை நிறுத்தியுள்ளார்கள் அதற்க்கான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா, இல்லையா? அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் போல் செயல் படுபவர்கள் பதவிகளை பறித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போது தான் ஆட்சியை அதிகாரிகளின் துணையுடன் சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்.
Rate this:
Share this comment
Cancel
sachin - madurai,இந்தியா
19-ஜூன்-201712:48:21 IST Report Abuse
sachin தேர்தல் கமிஷன் உத்தரவு இட்டும் முதல்வர் மீது ஏன் valakku பதிய வில்லை என்பதற்கு ஒரு அதிமுக பயலுக்கும் உறுப்பினருக்கும் தெம்பும் இல்லை அறிவும் இல்லை இது தான் உண்மை .....தேர்தல் ஆணைய உத்தரவு இட்டது ஏப்ரல் 18 இன்று வரை மூடி மறைத்து உள்ளனர் இதுவே மிக பெரிய குற்றசாட்டு இந்த லட்சணத்துல இவரு புலன் விசாரணை செய்கிறாராம் ....அதான் உண்மை என்று 89 லிஸ்ட் ஐ வித்து தான் ஆர் கே நகர் தேர்தலை ரத்து செய்தது பிறகு என்ன பிடிச்சி உள்ளெ போடுங்க நீதிஅரசர்களே .....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201712:31:10 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM நல்லவேளை செல்லூர் ராஜுவும் இந்த லிஸ்டில் இருக்கிறார்...இல்லைனா எடப்பாடி ராஜினாமா பண்ணுகிற கட்டாயம் வந்தால், அவரை முதல்வராகி விட்டிருப்பாய்ங்க..
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201712:29:09 IST Report Abuse
rajan ஆஹா அச்சினை வார்த்து எடுத்த மாதிரியில்ல பழனி முருகன் அடி மடியில கை வைக்கிறானே இவனும். தம்பி முருகன் கோடிகளை கொட்டி புடிச்ச பதவியாச்சே, இவன் ஒரே சுற்று சுற்றி வந்து ஞான பழத்தை கேட்கிற மாதிரி கேட்கிறானே இது தகுமோ தருமியே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை