சர்வதேச யோகா தினத்தில் 92,000 கைதிகள் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்வதேச யோகா தினத்தில் 92,000 கைதிகள் பயிற்சி

Updated : ஜூன் 19, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
சர்வதேச யோகா,  கைதிகள்,   லக்னோ,  உ.பி., சிறை, சர்வதேச யோகா தினம், யோகா,  முதல்வர் யோகி ஆதித்யநாத்,  சிறைத்துறை இணையமைச்சர் ஜெய்குமார் சிங் ஜெய்கி, தற்கொலை, சைக்கிள் யாத்திரை, சமாஜ்வாதி கட்சி,  International Yoga, Prisoners, Lucknow, UP, Prison, International Yoga Day, Yoga,
Chief Minister Yogi Aditya Nath, Prisons Minister Jaikumar Singh Jeyki, Suicide, Cycling Pilgrim, Samajwadi Party,

லக்னோ: சர்வதேச யோகா தினமான, 21ல், உ.பி., மாநில சிறைகளில் கைதிகளாக உள்ள, 92 ஆயிரம் பேர், யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும், 21ல் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகளை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடக்கும், உ.பி.,யில் உள்ள சிறைகளில், 92 ஆயிரம் கைதிகள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி, சிறைக் கைதிகளுக்கு, யோகா பயிற்சிகள் அளிக்கும் வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன.

இது குறித்து, உ.பி., மாநில சிறைத்துறை இணையமைச்சர் ஜெய்குமார் சிங் ஜெய்கி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சர்வதேச யோகா தினத்தன்று, உ.பி., முழுவதும் உள்ள சிறைகளின் வளாகங்களில், 92 ஆயிரம் கைதிகள் பல்வேறு யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர். யோகா பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்துவதன் மூலம், சிறைக் கைதிகளை மனதளவிலும், உடலளவிலும் சிறந்தவர்களாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.யோகா பயிற்சி செய்வதால், கைதிகளின் கவன சக்தி படிப்படியாக அதிகரிக்கும்; தற்கொலை எண்ணம் மறையும். யோகா நிபுணர் மேற்பார்வையில், கைதிகள், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மாநிலம் முழுவதும், சைக்கிள் யாத்திரை நடத்தி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாட, சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது.

Advertisement