தினகரன், அமைச்சர்கள் மீது வழக்கு பதிய தேர்தல் கமிஷன் பரிந்துரை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரன், அமைச்சர்கள், வழக்கு, தேர்தல் கமிஷன், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,  சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை, ஜெயலலிதா,   பன்னீர் அணி, மதுசூதனன், Dinakaran, Ministers, Case, Election Commission, Chennai, RK Nagar By-Election, Chennai High Court, Investigation, Jayalalitha, Panneer team, Madhusudhanan

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் நடந்த, பணப்பட்டுவாடா விவகாரத்தில், திடீர் திருப்பமாக, அ.தி.மு.க., சசிகலா அணி வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

தினகரன், அமைச்சர்கள், வழக்கு, தேர்தல் கமிஷன், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,  சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை, ஜெயலலிதா,   பன்னீர் அணி, மதுசூதனன், Dinakaran, Ministers, Case, Election Commission, Chennai, RK Nagar By-Election, Chennai High Court, Investigation, Jayalalitha, Panneer team, Madhusudhanan

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரான, ஜெயலலிதா இறந்த பின், அந்தத் தொகுதிக்கு, ஏப்ரல், ௧௨ல் இடைதேர்தலை,தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது, அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில், தினகரனும், பன்னீர் அணி சார்பில், மதுசூதனனும் போட்டியிட்டனர்.

தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள்,
வாக்காளர்களுக்கு பெரும் அளவில், பணப் பட்டுவாடா செய்ததாக, புகார்கள் எழுந்தன; அதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

கடிதம்


இந்நிலையில், பணப் பட்டுவாடா தொடர்பாக, தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக்கேட்டு, ஏப்., 26ல், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், வைரக்கண்ணன் என்பவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதற்கு, 'பணப் பட்டுவாடா வில் ஈடுபட்ட வேட்பாளர் தினகரன், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, தங்கமணி, விஜய பாஸ்கர் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்ய

பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என, தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது.இதையடுத்து, 'தினகரன் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வைரக்கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், அவர் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தினகரன் அணியினர், வாக்காளர் களுக்கு பணமும், பரிசு பொருட்களும் வாரி வழங்கினர். இதையடுத்து, அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர், ஏப்., 7ல் சோதனை நடத்தினர்.
அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தற்கான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, 90 கோடி ரூபாயை, முதல்வர் பழனிசாமி உட்பட, சிலஅமைச்சர்களிடம், ஒப்படைத்ததற்கான ஆவணங்களும் இருந்தன.

அதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, தேர்தல் கமிஷனோ, வருமான வரித்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தேர்தல் கமிஷனிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விளக்கம் கோரினேன்.

எட்டு கேள்விகள்


அதில், வாக்காளர்களுக்கு, ஓட்டுக்காக பணம் கொடுத்த தினகரன், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, தங்க மணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால், காரணம் என்ன என்பது உட்பட, எட்டு கேள்விகள் கேட்டிருந்தேன்.
அதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், 'தினகரன், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, போலீசில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஆகியோர் புகார் செய்ய வேண்டும்' என, ஏப்., 18ல், உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

Advertisement


ஆனாலும், அவ்வாறு போலீசில் புகார்செய்து நடவடிக்கை எடுக்காமல், தலைமை தேர்தல் அதிகாரியும், ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியும் அமைதியாக உள்ளனர்.எனவே, தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தினகரன், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது, இந்த அதிகாரி கள் புகார் செய்ய வேண்டும்.

அப்புகாரின் அடிப்படையில்,சென்னை போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்டநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த பரபரப்பு அடங்கி இருந்த நிலையில், இந்த விவகாரம், நீதி மன்றம் வரை சென்று உள்ளது, அ.தி.மு.க., சசிகலா அணியினரை கலக்கம் அடையச் செய்துள்ளது.

மா.பாண்டியராஜன் வரவேற்பு


''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் களுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகாரின் பேரில், முதல்வர் பழனிசாமி, தினகரன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது,'' என அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மா.பாண்டியராஜன் தெரிவித்தார்.
நெல்லையில் அவர் மேலும் கூறியதாவது:

தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் விரக்தி யின் விளிம்பில் இருக்கிறார்.எம்.எல்.ஏ., சரவணன் பேசியதாக, தனியார் 'டிவி'யில் ஒளிபரப்பப்படுவது மார்பிங் செய்யப்பட்ட காட்சிகளாகும். இத்தனை மாதங்கள் கழித்து இதை வெளியிடுவதின் நோக்கம் என்ன. பா.ஜ.,விற்கு நாங்கள் ஒரு போதும் கருவியாக இல்லை. தமிழகத்தில் இன்னும் மூன்று மாதத்தில் பலம் பெறுவதாக கூறும் பா.ஜ., தற்போது பலவீனமாக இருப்பதைத்தானே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

'தி.மு.க.,வும் வழக்கு தொடரும்'


ஆர்.கே.நகர் தொகுதியில், பண வினியோகம் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. மூன்று மாதங்களாகியும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர், தேர்தல் கமிஷனின் உத்தரவை நிறைவேற்றத் தவறினால், தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

- ஸ்டாலின், செயல் தலைவர், தி.மு.க.,
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
19-ஜூன்-201718:55:18 IST Report Abuse

M.Guna Sekaranஅப்போ யாரு நாளும் கேள்வி கேட்டால் தான் வேலையே நடக்கும் சட்டத்துக்கே ............. என்ன ஒரு நாடு நம் இந்தியா

Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201716:51:43 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிஅடுத்த சட்ட சபை பொதுத் தேர்தலை நோக்கித் தமிழகம் போய்க் கொண்டிருக்கிறது...

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஜூன்-201714:23:28 IST Report Abuse

SIVA. THIYAGARAJANதலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதாக செய்தியில் கண்டேன்.

Rate this:
sachin - madurai,இந்தியா
19-ஜூன்-201715:27:05 IST Report Abuse

sachinகனவில் கண்டு இருப்பீர்கள் ஐயா...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201714:00:38 IST Report Abuse

தேச நேசன் தேர்தல் ஊழல் வழக்குக்களை என்ன லட்சணத்தில் கோர்ட் கையாளுகிறது என்பதறிந்துகூட ஒரு அப்பாவி கோர்ட்டுக்குப் போயிருக்கிறார் பாவம் ஆகமொத்தம் தேர்தல் கமிஷனே பாஜக கையிலுள்ளதுபோல பிரச்சாரம் வலுவடைந்ததுதான் மிச்சம் அப்படி அவர்கள் கட்டுப்பாட்டில் தேர்தலாணையம் இருந்திருந்தால் பஞ்சாப் என்ன கேரளாவில் கூட வென்றிருக்கலாம் மேற்கு வங்கத்தில் நடந்த அராஜக வன்முறைத் தேர்தலை ரத்து செய்து கவர்னர் ஆட்சியே கொண்டுவந்திருக்கலாம் பிழைக்கத்தெரியாதவர்கள்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201713:53:35 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தனக்கு தானே படுகுழியை வெட்டிக்கொள்கிறது பாஜக. மக்கள் வெறுப்பின் விளிம்பில் கொதித்துக் கொண்டு இருக்கிறார்கள். மினாமி அதிமுக அரசின் ஒவ்வொரு ஊழலும், தவறும், வேடிக்கை காட்டும் பாஜகவின் தவறாக தான் பார்க்கப்படுகிறது. பாஜகவில் தலைமையில் இருக்கும் முட்டாள்கள் கூட்டத்துக்கு இது புரியுதா இல்லையா? தெரியலே.

Rate this:
19-ஜூன்-201715:27:37 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்அவர்கள் புரிந்து கொண்டார்கள். நேரம் பார்த்து ஆப்பு வைப்பார்கள்....

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201716:40:06 IST Report Abuse

Maverickஉனக்கு தெரிஞ்சு என்ன தெரியாம என்ன..? எருமை மேய்கிறதுக்கு இதெல்லாம் தேவையா..?...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201713:48:40 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்// சரவணன் பேசியதாக, தனியார் 'டிவி'யில் ஒளிபரப்பப்படுவது மார்பிங் செய்யப்பட்ட காட்சிகளாகும்... // ஆமாம் சரவணருக்கு ரெண்டு பசங்க.. ஆனா நைனா அவரு இல்லையாம்.

Rate this:
sachin - madurai,இந்தியா
19-ஜூன்-201715:28:06 IST Report Abuse

sachinசூப்பர் சார்...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
19-ஜூன்-201712:40:48 IST Report Abuse

Balajiதேர்தல் அதிகாரிக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்டு இரண்டு மாதமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது, நமது தமிழக தேர்தல் அதிகாரிகளின் அழகை தெளிவாக காட்டுகிறது........... இதற்கு பதிலளிப்பது அவர்களது கடமையாகும்......... தலைமைத்தேர்தல் ஆணையமும் வழக்கு தொடுக்க பரிந்துரைத்ததோடு மட்டுமில்லாமல் இரண்டு அல்லது மூன்று வார அவகாசத்தில் தமிழக தேர்தல் அதிகாரியிடத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ......... அப்படி கேட்கப்பட்டிருந்தால் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு வழக்கு தொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்................. அதை செய்யாமல் விட்டதும் தவறுதான்.........

Rate this:
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201711:58:17 IST Report Abuse

நெல்லை மணி,எடப்பாடியை இந்த வழக்கில் இழுப்பதை பார்த்தால், மோடி ஆதரவை எடப்பாடி இழந்து விட்டாரோ? பன்னீர் மோடியை கரெக்ட் பண்ணிட்டாரோ ? தி.மு.க., செயல் தலைவர் எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று ஓடுறார் சாடுறார் ஒத்த காலில் நிற்கிறார். என்னவெல்லாமோ பண்ணி பார்க்கிறார். கொள்ளை அடித்த கை சும்மா இருக்க முடியவில்லை. எப்படியாவது ஆட்சிக்கு வந்து தமிழ் நாட்டை விற்றாவது வேறு தீவுகளை இவர் பெயரில் வாங்கிடணும்னு நினைக்கிறார்.

Rate this:
krishna - cbe,இந்தியா
19-ஜூன்-201711:52:19 IST Report Abuse

krishnaவழக்கு மட்டும் போடப்படும், அதை எதற்க்காக போட்டோம் என்பதே தெரியாத மாதிரி இருந்து விடுவார்கள். சேகர் ரெட்டி, ராம்மோகன் ராவ் ஆகியோர் மீது வழக்கு போட்டார்கள். இப்போது என்ன ஆனது.

Rate this:
Kailash - Chennai,இந்தியா
19-ஜூன்-201710:39:45 IST Report Abuse

Kailashமத்தியஅரசு ஒன்றும் செய்யப்போவதில்லை. அவர்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போவதில்லை, ஆட்சியை கலைத்தால் காங் - திமுகதான் ஆட்சிக்கு வரும் இது இன்னமும் பாஜ வுக்கு பிரச்னை தற்சமயம் அடிமைகளின் உதவி ஜனாதிபதி தேர்தலுக்கு தேவை அடிமைகளை ஒன்றிணைத்து ஒட்டு போட இது போல எச்சரிக்கை வெளியிடுகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் இப்படியேதான் இருக்கும் இன்னமும் 4 வருடம் இப்படியேதான் இருக்கும் அதிமுக அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இன்னமும் 4 வருடம் தண்டனை உண்டு. ஊழல் இல்லாத அரசு நேர்மையான அரசு என்று மோடிஜி கூறுகிறார் மகிழ்ச்சி ஆனால் ஊழல் செய்யும் அரசு, தேர்தல் ஆணையத்திற்க்கே லஞ்சம் கொடுத்த அரசு, முதலமைச்சரை தேர்ந்தெடுக்க 10 கோடி வரை லஞ்சம் பெற்ற உறுப்பினர்களை கொண்ட அதிமுக அரசுக்கு ஆதரவாக இருப்பது எப்படி? மதியாராசுக்கு ஒன்றும் தெரியாதா உடனே ஆட்சியை கலைத்திருந்தால் நீங்கள் நேர்மையாளர். லஞ்சம் ஊழல் பெற்ற உறுப்பினர்கள் தான் பாஜ ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமா? ரஜினி கூறியது போல சிஸ்டம் சரியில்லை அரசு மட்டும் சரியாய் இருக்குமா? தமிழ் நாட்டை விட மிக சிறிய மாநிலமான புதுசேரிக்கு பாஜ கவர்னர் கிரண் பேடி உள்ளார் காரணம் அங்கு நடப்பது காங் ஆட்சி. குடைச்சல் தர கவர்னர் உடனடி தேவை. பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு கவர்னர் அப்போ அப்போ மும்பையில் இருந்து வந்து செல்லுவார் காரணம் இங்கு நடப்பது மத்தியஅரசு மூலம் நடக்கும் மறைமுக ஆட்சி. தயவு செய்து ஊழலுக்கு துணை போக மாட்டோம் என்று கூறாதீர்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201713:51:13 IST Report Abuse

தேச நேசன் தேர்தல் கமிஷன் பாஜக கையிலிருந்திருந்தால் எல்லா மாநில இடைத்தேர்தல்களிலும் வென்றிருக்குமே ? தேர்தல் வழக்குக்களை மாநில போலீஸ் தான் விசாரிக்கமுடியும் மாநில அரசின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே சி பி ஐ விசாரிக்கமுடியும் எனும் அடிப்படை சட்டம்கூட அறியாமல் கருத்துப்போட ஏன் வருகிறீர்கள்? தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்கூட்டியே பிடித்து கேஸ் போட்டதே மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல்துறைதான் அவர்கள் மீது என்ன குற்றம்? எஸ் ஆர் பொம்மை வழக்கு தீர்ப்புக்குப்பிறகு மெஜாரிட்டியுள்ள மாநில அரசுகளைக் கலைப்பது மத்திய அரசால் கிட்டத்தட்ட இயலாது என்றாகி விட்டது அதிமுக போனால் திமுக வரும் அப்போது மட்டும் ஊழலற்ற ஆட்சியா மலரப்போகிறது ? தாறுமாறான ஊழலுக்குப் பதில் விஞ்ஞான ஊழல் ஆட்சி வரும் ஆட்சியைக் கலைத்த கெட்டபெயர் மட்டுமே மிஞ்சும் கூடுதலாக மெஜாரிட்டியுள்ள அரசை கலைத்ததற்கு கோர்ட்டின் கண்டனத்தையும் தாங்க வேண்டிவரும் மாறிமாறி திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டு அதற்கான பலனை அனுபவிக்காமல் இருக்கமுடியுமா? தற்போதெல்லாம் பாவத்தின் சம்பளம் மரணமல்ல ஆளும் சுவர்க்கம்...

Rate this:
Pillai Rm - nagapattinam,இந்தியா
19-ஜூன்-201719:40:14 IST Report Abuse

Pillai Rmதேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் 'கொடுத்த' வழக்கில் ? யார்ட்ட கொடுத்தது மோசா ?...

Rate this:
Kailash - Chennai,இந்தியா
19-ஜூன்-201722:59:15 IST Report Abuse

Kailashசரியாக 1 வருட முன்பு உத்தரகண்ட் முதலமைச்சர் ஹாரிஸ் ராவத் விஷயத்தில் பாஜ அரசு உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கவில்லையா? அப்போது என்ன பாஜ நேர்மையாக இருந்ததா? மக்கள் அரசை கலைக்க முற்படவில்லையா? அதிமுக ஊழல் அரசு என்று தெரியும் பிறகு ஏன் ஊழல் கறை படித்த கைகளை வைத்து குடியரசு தலைவர் பதவிக்கு ஒட்டு போட மற்றும் அவர்களை ஏன் கெஞ்ச வேண்டும். உங்கள் ஆதரவு தேவையில்லை என்று சொல்லலாமே? ஏன் குள்ளநரிகளின் ஆதரவை கோர வேண்டும்? பொதுவாக லஞ்சம் வாங்கியவர்தான் கைது செய்ய படுவார்கள் கொடுக்க முற்பட்டவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து வாங்கியவரை உள்ளே தள்ளுவர் இந்த விஷயத்தில் கொடுக்க இருந்தவரை உள்ளே தள்ளிவிட்டனர். யாருக்கு என்பது மிக ரகசியமாக உள்ளது. ஒரு வேளை பெரிய தலையா? அவரை பிடித்து விசாரித்தால் உங்கள் (பாஜ) ரகசியத்தை வெளியே சொல்லிவிடுவேன் என்று மிரட்டினாரா? அதனால் off ஆகி விட்டனரா? //முன்கூட்டியே பிடித்து கேஸ் போட்டார்கள்// என்றால் இந்த வேகம் மற்ற விஷயத்தில் இது போல நடந்ததா? IT raid விஷயம் என்ன ஆனது? பல தலைகள் உருண்டதே.....

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement