இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்தது: சுவிஸ் வங்கி அறிவிப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்தது
சுவிஸ் வங்கி அறிவிப்பு

புதுடில்லி: சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளில், இந்தியர்கள், குறைந்தளவே கணக்குகள் வைத்திருப்பதாக, சுவிஸ் நாட்டை சேர்ந்த, தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.

 இந்தியர், கறுப்பு,பணம்,குறைந்தது,சுவிஸ்,வங்கி,அறிவிப்பு


வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத் துள்ள கறுப்புப்பணத்தை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளது குறித்த

விபரங்களை அளிப்பதற்கான ஒப்பந்தம், அந்நாட்டு அரசுடன் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த முடிவை, சுவிஸ் அரசு, சமீபத்தில் உறுதிப்படுத்தியது. வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கணக்குவிபரங்களை அளிப்பதற்கு, அவற்றின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது.
இந்நிலையில், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, சுவிஸ் தனியார் வங்கிக ளின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:

சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளை ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகள் மிகக்குறைவு.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு துவக்குவதை விட, ஆசியாவில் நிதி மையங்களாக திகழும் நாடுகளில், இந்தியர்கள் வங்கிக் கணக்கு துவக்குவது சுலபம்.

Advertisement


சமீப காலமாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் கணிசமாக குறைந்து வருகின்றன. 2015ம் ஆண்டு, இறுதி நிலவரப் படி, சுவிஸ் வங்கிகளில், 8,392 கோடி ரூபாய் மட்டுமே, இந்தியர்களின் முதலீடாக உள்ளது. இருப்பினும், பிற நாடுகளில், இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
25-ஜூன்-201710:02:00 IST Report Abuse

Barathanசாரி இந்திய நாட்டு கறுப்புப்பணம் குறையவில்லை என்பதுதான் உண்மை.

Rate this:
Kannan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201722:11:05 IST Report Abuse

Kannanஅவ்ளோ நல்லவைங்களாடா நீ

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
19-ஜூன்-201719:00:39 IST Report Abuse

Appavi Tamilanபண மதிப்பிழப்பு முழு தோல்வி என்பதையும், அதனால் நாட்டின் பொருளாதாரமே நிலைகுலைந்து அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதையும், சென்ற பொது தேர்தலில் நிதி உதவியை அள்ளிக்கொடுத்து உதவிய பெருநிறுவன முதலாளிகளின் வரும்படியை அதிகரிக்கவும், அவர்களிடம் மேலும் கருப்பு பணம் அதிகரிக்கவும் செய்யப்பட்ட ஒரு மோசடி வேலை என்பதை மறைக்க ஆட்சியாளர்கள் படாதபாடு படுகின்றனர். இது ஒரு வரலாற்றில் கரும்புள்ளியை போல மாபெரும் தவறு என்பதை முன்னாள் ஆண்டவர் தெளிவாக விளங்கியதை கேலி செய்த மூடர் கூடம் தற்போது அதே போல நடந்திருப்பது அம்பலமாகிவிட்டதை மறைக்க என்னென்ன கோமாளித்தனங்களை எல்லாம் செய்தாலும் இயலவில்லை. தற்போது ஊடகங்களை மிரட்டியோ அல்லது வளைத்துப் போட்டோ ஏதாவது செய்து அந்த மோசடி வேலையை ஒரு சாதனையாக சொல்ல முயல்கின்றனர். ஆனால் மக்கள் ஏமாற்றவில்லை. இனியாவது இந்த கார்ப்பரேட் அடிமைகள் ஆட்சி அடித்தட்டு மக்கள் வாழ்வை சீரழிக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சி என்பதை அதற்கு ஆதரவாக பேசும் அறிவிலிகள் உணர்வாராக.

Rate this:
19-ஜூன்-201715:24:56 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இதெல்லாம் இந்திய அரசை ஏமாற்ற சுவிஸ் நாடு செய்யும் கேவலமான தந்திரங்கள். பணத்தை கருப்பு பண முதலைகள் மாற்றியிருக்கலாம் ஆனால் அவர்களின் விவரம் , ஸ்டேட்மென்ட் கொடுத்தால் அவர்களை சுலபமாக பிடிக்கலாம். பல ஆயிரம் /லட்சம் கோடி பணத்தை ரொக்கமாக எடுத்து மற்ற வங்கிக்கு மாற்ற வாய்ப்பில்லை , அது வலைதள வங்கி சேவை மூலமாகத்தான் மாற்றப்பட்டிருக்கும், அது எந்த கணக்குக்கு போனது என்றும் தெரியும் , இந்த கணக்கில் அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்றும் வழக்கு பதியலாம்.

Rate this:
sundaram - Kuwait,குவைத்
19-ஜூன்-201714:04:14 IST Report Abuse

sundaramகடந்த பத்தாண்டுகளாகவே, இந்திய அரசு கருப்பு பணத்தை பிடிப்போம் பிடிப்போம் என்று கூறிக்கொண்டு இருக்கிறது. பிடித்துவிட்டால் என்ன செய்வது என்றே பல முதலைகள் ஸ்விஸ் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து மொரிஷியஸ் சைப்ரஸ் மலேசியா போன்ற நாடுகளில் முதலீடு செய்துவிட்டார்கள். இன்னும் சிலர் இலண்டன் வங்கிகளில் முடக்கிவிட்டார்கள். இதனால் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் குறைந்துவிட்டது. ஆனால், இந்தியர்களின் மொத்த கருப்பு பணம் என்றும் குறையவில்லை. நம்மூர்ல ஒருத்தரு மாசாமாசம் குடும்பத்தோட கூட்டமா துபாய் ஹாங்காங் இலண்டன்னு போய்கிட்டு வந்துகிட்டு இருந்தாரு, இப்போ கொஞ்ச்ச நாளா அவரு போறதில்லே. அதான் எல்லாம் செட்டில் ஆயிடுச்சுன்னு அர்த்தம்.

Rate this:
kuruvi - chennai,இந்தியா
19-ஜூன்-201712:50:59 IST Report Abuse

kuruviஉலகளாவிய திருட்டுக் கூட்டம்.

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
19-ஜூன்-201711:35:42 IST Report Abuse

Jaya Ramlast ten years we are heard these news ( we brought back black money from out side to india ) at that time that black money holders are get punishment. told whom that words?, manmohan, pranab mukerjee, P.Chidambaram, Narendra modi & Arunjetly these men are in our nations highest post, but till date single penny has not brought from out side of india by these men natively, there is big corruptions 2G, common wealth games corruption, coal mines corruption are held in these period then nearly 4 lakh crore taxes are discounted by central government to corporate companies but here local peoples 50 thousand, and 1 lakh loans are captured by banks through jabti of their sources, like tractors, vehicles and essential things, do you think these country is going develop never it is going to big dig.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
19-ஜூன்-201711:24:35 IST Report Abuse

dandyஇன்று. உலகில் எந்த நாடுகளிலும் வங்கி ... கணக்கு ...இன்டர்நெட் வழியில் எவரும் திறக்க முடியும் ... ஆகவே இதெல்லாம் பெரிய விடயம் இல்லை ....

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
19-ஜூன்-201710:30:35 IST Report Abuse

Karuthukirukkanஅருமை எப்பிடி ஒளிச்சிருக்காரு பாருங்க எங்க தல .. இன்னும் 2 வருஷம் விட்டா 10 பைசா இருக்காது .. என்ன ஊழல் ஒழிப்பு .. அடேங்கப்பா ..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201709:55:54 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மோடியின் முயற்சியால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆட்சிக்கு வரும் வரை 14 லட்சம் கோடி பணம் இருக்கு ஆளுக்கு 15 லட்சம் பேங்கில் போடுவோம் என்றவர்கள், வந்த லிஸ்டில் இருந்த பேரை சொல்ல கூட அனுமதி தராமல், பணம் எல்லாம் பறந்த பிறகு கறுப்புப்பணம் லேது ன்னு ஸ்விஸ் வங்கி சொல்லுவதாக சொல்லுகிறார்கள்.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement