குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை | குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

Updated : ஜூன் 18, 2017 | Added : ஜூன் 18, 2017
Advertisement
குழந்தை ,கல்லீரல், சிகிச்சை ,  மியாட் மருத்துவமனை, டாக்டர்கள் , சாதனை,சென்னை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சுரேந்திரன், கிழக்கு ஆப்ரிக்கா, தான்சானியா,செஷெல்ஸ் தீவு, 
Baby, liver, treatment, myat Hospital, doctors, Chennai, liver transplant specialist Dr. Surendran, East Africa, Tanzania, Seychelles Island, Dr. Surendran

சென்னை:உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, ஆறு மாத குழந்தை உட்பட, இரு குழந்தைகளுக்கு, சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து, மறு வாழ்வு அளித்துள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் சுயாட்சி பகுதியான, ஜன்சிபார் நகரைச் சேர்ந்த ஆறு மாத கைக்குழந்தை, அமீத் ஹாபித். அதே, கிழக்கு ஆப்ரிக்காவின் செஷெல்ஸ் தீவில், 'பைலரி ஆட்ரீஸியா'என்ற பிறப்பு குறைபாடுடன் பிறந்த, இரண்டு வயது குழந்தை, கிரேஸ் கியாரா செரில்.இரு குழந்தைகளும், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. குழந்தைகளை பரிசோதித்த, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர், வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இது குறித்து, மியாட் மருத்துவமனை தலைவர், மல்லிகா மோகன்தாஸ் மற்றும் டாக்டர் சுரேந்திரன் ஆகியோர் கூறியதாவது:குழந்தை அமீத் ஹாபித்திற்கு பிறந்த, 15 நாட்களில் மஞ்சள் காமாலை, ரத்தப்போக்கு பாதிப்புகள்கண் டறியப்பட்டு உள்ளன.பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனின்றி, மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு என, கண்டறிந்தோம். குழந்தையின் தாய், கல்லீரல் தானம் செய்தார்.
ஆறு முதல், 10 மாத குழந்தைகளுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சாதாரணமான காரியம் அல்ல. புதிய கல்லீரலில் இணைக்கப்பட வேண்டிய ரத்த நாளம் மிகச் சிறியதாக இருக்கும். தாயிடம் இருந்து, 350 கிராம் எடையில், 20 சதவீத கல்லீரல் எடுக்கப்பட்டது. அதை, 6 கிலோ எடை உடைய அமீத்திற்கு ஏற்ற வகையில், 250 கிராமாகக் குறைத்து, வெற்றிகரமாக பொருத்தினோம்.

குழந்தை கிரேஸ், 'பைலரி ஆட்ரீஸியா' என்ற, பிறப்பு குறைபாடுடன் பிறந்தது. அதற்கு, இலங்கையில் சிகிச்சை நடந்துள்ளது. ஆனால், இரண்டு வயதான போது, பாதிப்பு அதிகமானது. இங்கு அனுமதித்த போது, கல்லீரல் முற்றிலும் சேதமாகி இருந்ததை கண்டு பிடித்தோம்.அந்த குழந்தைக்கும், தாயின் கல்லீரலை தானமாக பெற்று, பொருத்தினோம். தற்போது, இரண்டு குழந்தைகளும் மறு வாழ்வு பெற்று, நலமுடன் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை